×

மாயாவதி மாஜி செயலாளரின் 230 கோடி பினாமி சொத்துக்கள் முடக்கம்

புதுடெல்லி: உபிமுன்னாள் முதல்வர் மாயாவதியின் செயலாளராக இருந்த நேத் ராமின் ரூ.230 கோடி பினாமி சொத்தை  வருமான வரித்துறை முடக்கியுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சித் தலைவரும், உத்தர பிரதேச முதல்வருமான மாயாவதியின் செயலாளராக இருந்தவர் ஐஏஎஸ் அதிகாரி நேத் ராம். கொல்கத்தா, மும்பை ஆகிய இடங்களில் இவருக்கு சொந்தமான வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் கடந்த மார்ச்சில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, ரூ. 1.64 கோடி ரொக்கப் பணம், சொகுசு கார்கள் உள்பட ரூ.300 கோடி மதிப்புள்ள பினாமி சொத்துகளுக்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இதையடுத்து, பினாமி சொத்து பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

இந்நிலையில், வருமான வரித்துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில், டெல்லி, நொய்டா, மும்பை, கொல்கத்தா ஆகிய இடங்களில் உள்ள நேத் ராமுக்கு சொந்தமான குடியிருப்புகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட 19 அசையா சொத்துகள் முடக்கப்படுகின்றன. அவற்றின் தற்போதைய சந்தை விலை ரூ.230 கோடி,’ என்று கூறப்பட்டுள்ளது

Tags : Mayawati ,Majhi Secretary , Mayawati, Binami assets, freeze
× RELATED மாயாவதி கட்சி எம்பி திடீர் நீக்கம்