×

மு.க.ஸ்டாலினை சந்தித்து பாமக, எஸ்.டி.பி.ஐ கட்சியினர் திமுகவில் இணைந்தனர்

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பாமக, எஸ்டிபிஐ கட்சியின் முக்கிய நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், சென்னை கிழக்கு மாவட்டம் அம்பத்தூர் கிழக்கு பகுதியை சேர்ந்த பாமக திருவள்ளூர் தெற்கு மாவட்ட அவைத்தலைவர் கோ.முத்துகுமார் தலைமையில், பாமகவைச் சேர்ந்த திருவள்ளூர் தெற்கு மாவட்ட அமைப்பு தலைவர் வி.எஸ்.தியாகராஜன், எஸ்.பரணிதரன், இளைஞர் அணி எம்.மோகன், 84வது வார்டு வட்ட தலைவர் விஜய், 84வது வார்டு துணைச் செயலாளர் டி.முத்து, சி.செல்வம், எம்.ஆதித்யா, ஆர்.பிரசாந்த், ராஜேஷ், புருஷோத்தமன், பூபாலன், சதீஷ், செந்தில்குமார், பிரபாகரன், கார்த்திக், அருளானந்தன், கே.வள்ளி, எஸ்.ராஜா, பி.கமலேஷ் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர்.

அதேபோல, சென்னை கிழக்கு மாவட்டம், துறைமுகம் பகுதியைச் சேர்ந்த எஸ்.டி.பி.ஐ. கட்சியின் வட்டார துணைத் தலைவர் அலியாஸ்கர் ஷாகிர் தலைமையில், வட்டார உறுப்பினர்களான தாஹீர் சுனெல்வாலா, ஹூசிபா  கொச்சின்வாலா, குதூப் கூஹுக்கர் மற்றும் முர்டாசா கத்தாவாலா, அட்னான் மனாப், அலியாப்பாஸ், அலிஸ்கர் உன்ஞாவாலா, அலிஸ்கர் முஜ்புர்வாலா, சாய்புதீன் பம்போட், பெரோஸ் பார்மால், ஹூசை லில்வாலா, ஹூசிபா மிட்ஹய், ஜூஸீர் பாலன்புர்வாலா, குமுசீமா நாவாவாஸ் வாலா, முபட்லால் பார்மால், முபட்லால் கராச்சி, முர்டாசா இமானி, முர்டாசா மில்வாலா, முர்டாசா டோடானாவாலா, முஸ்தபா தானேரா, முஸ்தபா காதிர், முர்டாசா தாஹூத்வாலா, சாய்புதீன் லோஹன்ட்வாலா,  சாய்புதீன் ரசீத், தாஹீர் சித்புர்வாலா, ஹசான் புர்யாவாலா ஆகியோர் தி.மு.க.வில் இணைந்தனர்.

அப்போது, திமுக பொருளாளர் துரைமுருகன்,  முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு எம்பி, சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர்  பி.கே.சேகர்பாபு எம்எல்ஏ, அம்பத்தூர் தெற்கு பகுதி திமுக செயலாளர்  டி.எஸ்.பி.ராஜகோபால், அம்பத்தூர் வடக்கு பகுதி திமுக செயலாளர் ஜோசப்  சாமுவேல், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் எம்.டி.ஆர்.நாகராஜ், 83வது  வட்டச் செயலாளர் மு.விஜயகுமார் மற்றும் பிராட்வே வியாபாரிகள் நலச் சங்கத் தலைவர் பக்கீர் பாய், துறைமுகம் கிழக்கு பகுதி செயலாளர் எஸ்.ராஜசேகர், துறைமுகம் மேற்கு பகுதி செயலாளர் எஸ்.முரளி, வட்டச் செயலாளர் கே.கவியரசன் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags : DMK ,MK Stalin ,SDPI ,meeting , MP and the SDPI joined DMK, meeting with MK Stalin
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...