×

மதுரை, கோவை, பெங்களூரு உட்பட முக்கிய நகரங்களுக்கு இயக்கப்படும் அதிவேக ரயில்கள் தனியார் மயமாகிறது

* சென்னை புறநகர் ரயில் சேவையும் கை மாறுகிறது
* டெல்லியில் 27ம் தேதி முக்கிய முடிவு

புதுடெல்லி: மதுரை, கோவை, பெங்களூரு உட்பட முக்கிய நகரங்களுக்கு இயக்கப்படும் அதி வேக ரயில்களை தனியார் மயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதுபோல், சென்னை புறநகர் ரயில் சேவையும் தனியாரிடம் ஒப்படைக்கப்படலாம் என தெரிகிறது. .ரயில்வேயை தனியார் மயமாக்கும் நடவடிக்கை, முந்தைய பாஜ ஆட்சியிலேயே தொடங்கிவிட்டது. எதிர்க்கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு காரணமாக கிடப்பில் போடப்பட்டன. தற்போது தனி பலத்துடன் மத்தியில் 2வது முறையாக பாஜ ஆட்சிப்பொறுப்பு ஏற்ற பிறகு, தனியார் மயமாக்கும் நடவடிக்கைகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. முதல் கட்டமாக தங்க நாற்கர பாதை எனப்படும் சென்னை -மும்பை, மும்பை-டெல்லி,  டெல்லி - ஹவுரா, ஹவுரா - சென்னை ஆகிய வழித்தடங்கள், முக்கிய வழித்தடங்களில்  தனியார் ரயில்கள் இயக்கும் திட்டமும் தயாராகி வருகிறது.

புறநகர் சேவையும் தப்பவில்லை:  பெரும்பாலான மக்களுக்கு மிகவும் வசதியாக இருப்பது புறநகர் மின்சார ரயில்கள்தான். ஆனால் இந்த வழித்தடங்களை கூட தனியார் மயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன்படி சென்னை, மும்பை, கொல்கத்தா, செகந்திராபாத் நகரங்களில் இயங்கும் ரயில்கள் தனியார் வசம் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து ரயில்வே அதிகாரிகளுக்கு, ரயில்வே அமைச்சகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது: பயணிகள் ரயில் சேவைகளை தனியாரிடம் ஒப்படைப்பது டெல்லியில் வரும் 27ம் தேதி காலை 11 மணிக்கு கூட்டம் நடைபெறுகிறது. ரயில்வேயை தனியாரிடம் ஒப்படைத்து, உலகத்தரம் வாய்ந்த சேவையை அளிப்பது தொடர்பாக ரயில்வேயை தனியார் மயமாக்க 100 நாள் செயல்திட்டம் வகுக்கப்படுகிறது. இதன்படி, முக்கிய நகரங்கள், வழித்தடங்களில் இயக்கப்படும் பகல் மற்றும் இரவு நேர ரயில்களை, அந்தந்த வழித்தடங்களை ஏலம் எடுத்து தனியார் இயக்கலாம். எந்தெந்த வழித்தடங்களை தனியாரிடம் ஒப்படைக்கலாம் என்பது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசனை நடத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Tags : cities ,Coimbatore ,Bangalore ,Madurai , High-speed trains , major cities,Madurai, Coimbatore and Bangalore
× RELATED பெங்களூரு குண்டு வெடிப்பு சம்பவம்...