×

பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்குடன் முதல்வர் சந்திப்பு

சென்னை: மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று சந்தித்து பேசினார். மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்ராத் சிங் நேற்று மதியம் சென்னை, தாம்பரத்தில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டார். இதையடுத்து சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் நேற்று இரவு தங்கினார்.சென்னை வந்த மத்திய பாதுகாப்பு துறை அமைச்சரை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று இரவு 7.30 மணிக்கு சந்தித்து பேசினார். அப்போது அமைச்சர் ஜெயக்குமாரும் உடன் சென்றார். இந்த சந்திப்பின்போது  சென்னை அனகாபுத்தூர், பல்லாவரம் மற்றும் திருச்சியில் கட்டப்பட்டு வரும் உயர்மட்ட பாலங்க ளுக்கு  பாதுகாப்பு துறைக்கு சொந்தமான நிலங்களை வழங்குவது, ெசன்னை, கோவை, திருச்சி விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலங்களை வழங்குவது குறித்து கோரிக்கை மனுவை அளித்தார்.


Tags : Rajnath Singh ,CM , CM , defense minister Rajnath Singh
× RELATED தீவிரவாதிகளின் புகலிடமாக பாகிஸ்தான் உள்ளது: ராஜ்நாத் சிங்