×

தமிழக-கேரள முதல்வர்கள் சந்திப்பு மூலம் நதிநீர் பிரச்னைகளுக்கு சுமுக தீர்வு: ஜி.கே.வாசன் அறிக்கை

சென்னை: தமிழக - கேரள முதல்வர்கள் சந்திப்பு மூலம் இரு மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பிரச்னைகளுக்கு தமிழக அரசு சுமுக தீர்வு காண வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறினார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கேரள முதல்வர் பினராயி விஜயனை நேரில் சந்தித்து நதிநீர் பங்கீடு தொடர்பாக சந்தித்து நடத்த இருக்கும் பேச்சுவார்த்தை இரு மாநிலங்களுக்கும் பயன் தரும். கடந்த 15 ஆண்டுகளில் இரு மாநில முதல்வர்கள் இடையே நடைபெற இருக்கின்ற இந்த சந்திப்பானது தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்பது தமிழக மக்களின் எதிர்பார்ப்பாகும்.

குறிப்பாக, 2004ம் ஆண்டில் முதல்வராக இருந்த ஜெயலலிதா, கேரள முதல்வராக இருந்த உம்மன் சாண்டியை இரு மாநிலங்களுக்கு இடையே நிலவும் பிரச்னைகள் தொடர்பாக சென்னையில் பேசியது பயன் தந்தது. தற்போதைய சந்திப்பின்போது முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி உயர்த்துவது குறித்தும், 2000ம் ஆண்டில் புதுப்பிக்கப்பட வேண்டிய பரம்பிக்குளம்-ஆழியாறு ஒப்பந்தத்தை புதுப்பிக்க வேண்டும். தமிழக முதல்வர், அமைச்சர்கள், அதிகாரிகள் குழு தமிழகத்தின் நியாயத்தை அழுத்தமாக எடுத்துரைக்க வேண்டும்.

இரு மாநில நல்லுறவுக்கு மேலும் வழி வகுக்க வேண்டும். காவிரி நதிநீர் பங்கீடு உள்ளிட்ட அண்டை மாநில நதிநீர் பிரச்னைகளுக்கு உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதாடியது நல்ல தீர்ப்பை பெற்றுத்தந்தது. அந்த வகையில் இப்போதைய பேச்சுவார்த்தையானது நீண்டகாலமாக தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களுக்கு இடையே நிலவும் நதிநீர் உள்ளிட்ட அனைத்து பிரச்னைகளுக்கும் சுமுகத் தீர்வு ஏற்படும் இவ்வாறு ஜி.கே.வாசன் கூறி உள்ளார்.

Tags : Chief Ministers ,Kerala ,Tamil Nadu ,GK Vasan ,encounter ,Kerala River First , Tamil Nadu, Kerala Chief Ministers, river water, clearing, GK Vasan
× RELATED தமிழக – கேரள எல்லையோர கிராமங்களில்...