×

மோடி - ட்ரம்ப் சந்திப்பு,..மோடிக்கும் எனக்கும் கெமிஸ்ட்ரி நன்றாக உள்ளது,..டொனால்டு ட்ரம்ப்

நியூயார்க்: நியூயார்க் நகரில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் சந்தித்துள்ளனர். கூடிய விரைவில் இந்தியா அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து ஆகும் என்று ட்ரம்ப் கூறியுள்ளார். இந்தியாவின் சிறந்த நண்பர் டொனால்டு ட்ரம்ப் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இருநாடுகளுக்கு இடையேயான 3 வது பேச்சுவார்த்தை 3 மாதங்களில் நடைபெறும் என்று டிரம்ப் கூறியுள்ளார். இந்தியா-பாகிஸ்தான் நாடுகள் இருநாட்டு பிரச்சனையை தீர்த்துக்கொள்ள டிரம்ப் கூறியுள்ளார்.

ஹூஸ்டன் நகரில் ஹவுடி மோடி நிகழ்ச்சிக்கு அதிபர் ட்ரம்ப் வந்ததற்கு நன்றி என்று மோடி தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எனது நண்பர் மட்டுமின்றி இந்தியாவின் சிறந்த நண்பர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மோடிக்கும் எனக்கும் கெமிஸ்ட்ரி நன்றாக உள்ளது என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இந்தியாவின் தந்தை மோடி என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் புகழாரம் சூட்டியுள்ளார்.

Tags : Modi - Trump ,Donald Trump ,Modi , Modi, Trump, Chemistry, Howdy Modi show
× RELATED அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவை ஏற்க...