×

டாக்டர், நர்சுகளின்றி காலியாக கிடந்த துறையூர் அரசு மருத்துவமனை: வீடியோ எடுத்து கலெக்டர், அதிகாரிகளுக்கு வாட்ஸ் அப்

துறையூர்: துறையூர் அரசு மருத்துவமனையில் 7 மணிக்கு வரவேண்டிய டாக்டர்கள், நர்சுகள் வராததால் காய்ச்சல் பாதித்த மகனுக்கு சிகிச்சை பெற முடியாமல் தவித்த வாலிபர் காலியாக கிடந்த மருத்துவமனையை வீடியோ எடுத்து வாட்ஸ் அப்பில் கலெக்டர், மருத்துவ அதிகாரிகளுக்கு அனுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துறையூர் அருகே கீரம்பூர் குறிச்சி தெருவை சேர்ந்தவர் சதீஷ்(30). இவரது மகன் பிரசன்னாவுக்கு(5) காய்ச்சலுக்கு  சிகிச்சை பெறுவதற்காக  நேற்றிரவு 7.30 மணி அளவில் அவர் குழந்தையுடன் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார். அங்கு அவசர சிகிச்சை பிரிவில் டாக்டர், நர்ஸ்  யாரும் இல்லை. அப்போது பைக்கில் சென்று கீழே விழுந்து காயமடைந்த 2 பேர் சிகிச்சைக்கு வந்தனர். அவர்களும் காலில் ரத்தம் சொட்ட சிகிச்சை பெற முடியாமல் வலியால் துடித்தனர்.  

இதைபார்த்துக்கொண்டிருந்த சதீஷ் ஆத்திரத்தில்  தனது செல்போனில் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவு, உள்நோயாளிகள் பிரிவு உள்பட மருத்துவமனை வளாகத்தை வீடியோ எடுத்து வாட்ஸ் அப்பில் திருச்சி கலெக்டர், மருத்துவம் மற்றும் ஊரக நல பணிகள்  இயக்குனர்(சென்னை), திருச்சி இணை இயக்குனர் ஆகியோருக்கு அனுப்பினார். மேலும் இந்த வீடியோ துறையூர் மற்றும் அனைத்து பகுதிகளிலும்  வைரலாக பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது  இந்நிலையில் இரவு 7மணிக்கு வேலைக்கு வரவேண்டிய டாக்டர், நர்ஸ் மற்றும் ஊழியர்கள் 7.45 மணிக்கு வந்தனர். அதன்பின்னர், சிறுவனுக்கும், விபத்தில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளித்தனர்.

ஆஸ்பத்திரியில் டாக்டர்கள், ஊழியர்கள் வருகை பதிவை குறிக்கும் பயோ மெட்ரிக் இயந்திரம் இல்லை. இது அவர்களுக்கு சாதகமாக போனதால் இஷ்டத்துக்கு வேலைக்கு வருகின்றனர் என  நோயாளிகள், மக்கள் ஆவேசத்துடன் தெரிவித்தனர். இந்த சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பந்தப்பட்ட டாக்டர், ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

Tags : government hospital ,Doctor ,Thuraiyur ,collectors , Thuraiyur Government Hospital, Watts App
× RELATED நின்றிருந்த லாரி மீது கார் மோதி கடலூர் அரசு டாக்டர் படுகாயம்