×

வேலூர், அரக்கோணம், ஜோலார்பேட்டை ரயில் சேவையில் மாற்றம்

சென்னை: தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: வேலூர் கன்டோன்மென்ட்டில் இருந்து அரக்கோணத்திற்கு 25, 26 மற்றும் 28 ஆகிய தேதிகளில் மாலை 5.10மணிக்கு புறப்படும் ரயில் ரத்து செய்யப்படுகிறது. இதேபோல், ஜோலார்பேட்டையில் இருந்து அரக்கோணத்திற்கு 25, 26ம் தேதிகளில் மதியம் 1.30க்கு செல்லும் ரயில் ஜோலார்பேட்டை முதல் லத்தேரி வரை மட்டும் இயக்கப்படும். அரக்கோணத்தில் இருந்து 28ம்தேதி மதியம் 1.05 மணிக்கு புறப்படும் வேலூர் கன்டோன்மென்ட் செல்லும் ரயில் காட்பாடி அடுத்த சேவூர் வரை மட்டுமே இயக்கப்படும்.

மேலும் 25, 26 மற்றும் 28ம் தேதிகளில் வேலூர் கன்டோன்மென்டில் இருந்து அரக்கோணத்திற்கு மாலை 5.40 மணிக்கும், 25, 26ம் தேதி லத்தேரியில் இருந்து அரக்கோணத்திற்கு மாலை 6.10 மணிக்கும், 28ம் தேதி சேவூரில் இருந்து வேலூர் கன்டோன்மென்டுக்கு மதியம் 3.50 மணிக்கும் பயணிகள் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Tags : Vellore ,Arakkonam ,Jolarpettai , Vellore, Arakkonam, Jolarpettai, Rail Service, Transfer
× RELATED மெமு எக்ஸ்பிரஸ் ரயில் 3 நாட்கள் ரத்து வேலூர் கன்டோன்மென்ட்- அரக்கோணம்