×

பி.வி.சிந்துவின் வெளிநாட்டு பயிற்சியாளர் கிம் ஜி ஹியன் ராஜினாமா: கிம் விலகியிருப்பது வருத்தம் அளிப்பதாக சிந்து பேட்டி

மும்பை: பி.வி.சிந்துவின் வெளிநாட்டு பயிற்சியாளர் கிம் ஜி ஹியன் தனது பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் பி.வி.சிந்து தங்கம் வென்றார். இதன்மூலம் உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற முதல் வீராங்கனை என்ற வரலாற்று சாதனையை படைத்தார். இது தொடர்பாக மும்பையில் பி.வி.சிந்து அளித்த பெட்டியில் தனது வெளிநாட்டு பயிற்சியாளர் கிம் ஜி ஹியனின் ஆலோசனையின் படியே ஆட்ட அணுகுமுறையில் சில மாற்றங்கள் செய்ததாகவும் அதன் காரணமாகவே தங்கம் வென்றேன் என கூறியிருந்தார்.

இந்நிலையில் தென் கொரியா நாட்டை சேர்ந்த பி.வி.சிந்துவின் பயிற்சியாளர் கிம் ஜி ஹியன், தனது பயிற்சியாளர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். கிம் ஜி ஹியனின் கணவர் நரம்பியல் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருடன் இருந்து பார்த்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் பயிற்சியாளர் பதவியில் இருந்து கிம் ஜி ஹியன் ராஜினாமா செய்துள்ளதாக இந்தியாவின் தலைமை தேசிய பயிற்சியாளர் புல்லேலா கோபிசந்த் விளக்கம் அளித்துள்ளார்.

இந்நிலையில் இது தொடர்பாக பி.வி.சிந்து கூறுவதாவது; ஒப்பந்தப்படி 18 மாத பயிற்சி காலங்கள் மீதமுள்ள நிலையில் கிம் விலகியிருப்பது தனக்கு வருத்தம் அளிக்கிறது. விளையாட்டு வீரர்கள் வாழ்க்கையில் இதுபோன்ற செய்திகளை கடந்து செல்லவேண்டியது அவசியம் எனவும் கூறியுள்ளார்.


Tags : Kim Ji Heian ,Kim PV Sindhu ,Kim Ji Hyun , PV Sindhu, Coach Kim Ji Hyun, resigns
× RELATED 9 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை...