×

அமெரிக்காவில் தமிழகத்தை சேர்ந்தோர் பங்கேற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி

அமெரிக்கா: அமெரிக்கா நியூ ஜெர்ஸி நகர் வாழ் தமிழ் மக்களின் ஒன்று கூடல் நிகழ்ச்சி, கடந்த சனிக்கிழமை மாலை எடிசன் முஸல்லாவில்  நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இலங்கை மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த மக்கள் திரளாக கலந்து கொண்டனர். நியூ ஜெர்ஸி வருகை தந்துள்ள இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் தலைவரும், தமிழ்நாடு முஸ்லீம் தொண்டு இயக்கத்தின் பொது செயலாளரும், காயிதே மில்லத் கல்லூரியின் முன்னாள் முதல்வருமான பேராசிரியர் முனைவர்  சேமுமு முஹம்மதலி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். எடிசன் முஸல்லாவின் இமாம் முப்ஃதி ஹிஸாம் நவாஸ் தலைமை தாங்கினார்.

பேராசிரியர் முனைவர்  சேமுமு முஹம்மதலி மனதை ஒருமைப் படுத்துதல் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். சமூக நல்லிணக்கம் மற்றும் தாய் மொழி தமிழை அமெரிக்க வாழ் வருங்கால சந்ததியினருக்கு  கற்றுத் தரவேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தி பேசினார். இந்நிகழ்வில் பங்கு பெற்ற பிற மொழி பேசும் அன்பர்களுக்கு சிறப்பு விருந்தினரின் உரையை முப்ஃதி ஹிஸாம் நவாஸ் அவர்கள் மொழிபெயர்ப்பு செய்தார். காயல்பட்டினம் சாளை. முஹம்மத் முஹிய்யதீன் ஒருங்கிணைப்பில் இந்நிகழ்ச்சியை ஸ்ரீலங்கன் தமிழ் முஸ்லீம் அசோசியேசன் மற்றும் தமிழ் முஸ்லீம் ஆஃப் நியூ ஜெர்ஸி அமைப்புகளின்  நிர்வாகிகள் மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்நிகழ்ச்சியில் ஃபியாஸ் ஃபாருக், ரிபாய் மொஹிதீன், இனாமுல் ஹசன், முனீர், ஹசன் உபைதீன், ஷுக்ரி, நிஃமத்துல்லாஹ், நிலாமுதீன், அக்மல் சையத், தௌபீக் முஸ்தபா, சித்தீக் ஆகியோருடன்  அமெரிக்க தொழிலதிபரும் வழக்கறிஞரும், அமெரிக்க காயிதே மில்லத் பேரவைத் தலைவருமான  காயல் சல்மான் முஹம்மத் மற்றும்  காயல் சாளை. முஹம்மத் முஹிய்யதீன் ஆகியோர் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினரை கவுரவித்து எடிசன் முஸல்லாவின் இமாம் முப்ஃதி ஹிஸாம் நவாஸ் அவர்கள்  நினைவுப் பரிசை பேராசிரியர்  முனைவர் சேமுமு முஹம்மதலிக்கு வழங்கினார். நியூஜெர்சி ஸ்ரீலங்கா முஸ்லிம் அமைப்பின் செயற்குழு உறுப்பினர் தௌபீக் முஸ்தபா நன்றி நவில பாரம்பரிய உணவுடன் இந்த ஒன்று கூடல் இனிதே நிறைவுற்றது.

Tags : United States , Discussion, program,United States
× RELATED இஸ்ரேல் மீது ட்ரோன், ஏவுகணை தாக்குதலை தொடங்கியது ஈரான்