×

ரெப்போ அடிப்படையில் வட்டி: எஸ்பிஐ முடிவு

புதுடெல்லி: அடுத்த மாதம் 1ம் தேதியில் இருந்து ரெப்போ வட்டி அடிப்படையில் வட்டியை நிர்ணயிக்க பாரத ஸ்டேட் வங்கி முடிவு செய்துள்ளது. நாட்டின் பொருளாதார வளர்ச்சியை கருத்தில் கொண்டு, ரிசர்வ் வங்கி தொடர்ந்து 4 தவணைகளில் குறுகிய கால கடன் வட்டியை (ரெப்போ)  இதுவரை 1.1 சதவீதம் குறைத்துள்ளது. ஆனால், வங்கிகள் அதில் பாதி அளவு பலனை கூட வாடிக்கையாளர்களுக்கு வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது.

தற்போது வங்கிகள் எம்சிஎல்ஆர் முறையில் வட்டியை நிர்ணயித்து வருகின்றன. அக்டோபர் 1ம் தேதி முதல், அரசு குறுகிய கால கடன் பெற வெளியிடும் கருவூல பில் மற்றும் ரெப்போ வட்டி விகிதம் போன்றவற்றின் அடிப்படையில் வட்டி விகித நிர்ணயத்தை அமல்படுத்த ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.இதன்படி, அக்டோபர் 1ம் தேதி முதல் எம்சிஎல்ஆர் விகிதத்தை அளவீடாக கொண்டு வீடு, வாகன கடன்கள் மற்றும் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் கடன்களை நிர்ணயிக்க முடிவு செய்திருப்பதாக பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) அறிவித்துள்ளது.

Tags : SBI , Interest, repo , SBI results
× RELATED சுரண்டையில் நள்ளிரவில் மர்மநபர் துணிகரம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி