×

பீட்டர்ஸ்பர்க் ஓபன் டானில் சாம்பியன்

செயின்ட் பீட்டர்ஸ்பர்க்: ரஷ்யாவில் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடைபெற்றன. இதன் ஆண்கள் ஒற்றையர் இறுதிப் போட்டியில்  ரஷ்யாவின்  டானில் மெட்வதேவ்,  குரோஷியாவின் போர்னா் கோரிக் ஆகியோர் மோதினர். போட்டியின் போது டானிலின் வேகமான சர்வீஸ்களை சமாளிக்க முடியாமல்  போர்னா திணறினார். முடிவில் உலகின் 4ம் நிலை வீரரான டானில்,  14ம் நிலை  வீரர் போர்னாவை 6-3, 6-1  என்ற நேர் செட்களில் வீழ்த்தினார்.

டானில் தொடர்ந்து 5வது முறையாக இறுதிப் போட்டியில் விளையாடியது குறிப்பிடதக்கது.  வாஷிங்டன், மோன்ட்ரியல், சின்சினாட்டி, யுஎஸ் ஓபன்  ஆகிய தொடர்களின் இறுதிப் போட்டிகளில் 23 வயதான டானில் விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்ல கடந்த 27 போட்டிகளில் 24 போட்டிகளில் டானில் வெற்றிப் பெற்றுள்ளார். தோற்றப் போட்டிகள் இறுதிப் போட்டிகளாகும்.

Tags : Petersburg Open Dancing Champion , Petersburg, Open Dancing Champion
× RELATED இரட்டை சதம் விளாசினார் வில்லியம்சன்: நியூசிலாந்து 519/7 டிக்ளேர்