×

இரட்டையர் போட்டி இந்திய வீரர் வெற்றி

செயின்ட் பீட்டர்ஸ்பர்க் டென்னிஸ் போட்டியின் இரட்டையர் பிரிவில் டிவிஜி ஷரண்(இந்தியா)/ இகோர் ஜெலேனய்(ஸ்லோவாக்கியா) இணையுடன்,  இத்தாலியை சேர்ந்த மாட்டீயோ பெர்ரேட்டினி/ சிமோன் பொலேல்லி இணை மோதியது. அதில் டிவிஜி/இகோர் இணை 6-3, 3-6, 10-8 என்ற செட்களில்  இத்தாலி இணையை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. டெல்லியை சேர்ந்த 33 வயதான டிவிஜி 2018ம் ஆண்டு விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் போட்டியில் காலிறுதி வரை முன்னேறியுள்ளார். அதேபோல் கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் இரட்டையர் பிரவில் தங்கம் வென்றார் டிவிஜி. செயின்ட் பீட்டர்ஸ்பர்க் வெற்றியை தனது தாயின் பிறந்தநாள் பரிசாக அர்ப்பணிப்பதாக டிவிஜி தெரிவித்தார்.

Tags : player ,Indian , Indian player wins ,doubles match
× RELATED ஐசிசியின் பிப்ரவரி மாதத்திற்கான...