×

கோஹ்லிக்கு ஐசிசி எச்சரிக்கை

மும்பை: பெங்களூரில் நேற்று முன்தினம் நடைப்பெற்ற டி20 போட்டி ஏராளமான சர்ச்சைகளை, விமர்சனங்களை  ஏற்படுத்தின. இப்போது ஒரு எச்சரிக்கையும் அந்தப் பட்டியலில் சேர்ந்துள்ளது. இந்தியா வீரர்கள் தெ.ஆப்ரிக்கா வீரர் பியூரன் ஹெண்டிரிக்ஸ் பந்து வீச்சை சமாகளிக்க முடியாமல் திணறினர். ரோகித் சர்மாவையும் அவர் விரைவாக வெளியாற்றினார். அடுத்த வந்த  கேப்டன் வீராட் கோஹ்லிக்கு பியூரன் மீது கோபம் இருந்தது. அதை 5வது ஓவரில் ரன் எடுக்கும் போது பியூரன் மீது கோஹ்லி தோள்பட்டையில் இடித்து வெளிப்படுத்தினார். அதை அவர் வேண்டுமென்றே செய்தது பளிச்சென தெரிந்தது. ஆனால் பியூரன் சிரித்துக் கொண்டே  விலகி நின்றார்.

இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐசிசி) நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில்,‘ பெங்களூர் போட்டியின் போதது, கோஹ்லி ஐசிசி நடத்தை விதி 2.12மீறி உடல் தொடர்பை வெளிப்படுத்தியுள்ளார். இது கண்டனத்திற்கு உரியது. அவர் தனது தவறை ஒப்புக் கொண்டதால் விசாரணை தேவையில்லை. ஆனால் அவரது செயல்பாடு பதிவேட்டில் ஒரு குற்றப்புள்ளி சேர்க்கப்பட்டுள்ளது. அவருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது. கோஹ்லி ஏற்கனவே 2018 ஜனவரியில் தெ.ஆப்ரிக்காவுடனான போட்டியின் போதும், 2019 உலக கோப்பையில் ஆப்கானிஸ்தானுடனான போட்டியின் போதும் தலா ஒரு குற்றப்புள்ளிகளை பெற்றுள்ளார். இது அவருக்கு 3வது குற்றப்புள்ளியாகும்.

Tags : ICC ,Kohli Kohli , ICC ,Kohli
× RELATED ஐசிசி உலக கோப்பை ‘டூர்’ நியூயார்க்கில் தொடங்கியது