×

வானிலை அறிஞர்கள் தகவல் உலகில் நேற்று இரவு, பகல் சமமான நேரம்

சென்னை: சம இரவு நாள் (Equinox) என்று அழைக்கப்படும் சம இரவு, சம பகல் பொழுது நிகழ்வு என்பது பூமத்திய ரேகையை சூரியன் கடந்து செல்லும் நாளாக இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் 2 முறை இது போன்ற நிகழ்வு  ஏற்படுகிறது.இந்த நாட்களில் இரவு 12 மணி நேரமாகவும், பகல் 12 மணி நேரமாகவும் இருக்கும். சம இரவு, சம பகல் நாட்கள் எப்படி கணக்கிடப்படுகிறது என்றால், பூமத்திய ரேகையை எவ்வளவு தூரம் தள்ளி சூரியன் இருக்கிறது என்பதை  கணக்கிடும் முறை. குறிப்பாக மார்ச் 20ம் தேதியும் செப்டம்பர் 22ம் தேதியும் இதுபோன்ற நிகழ்வு ஏற்படும். இந்த  ஆண்டுக்கான சம இரவு, என்பது செப்டம்பர் 22ம் தேதி முதல் 24ம் தேதி வரை கணக்கிடப்படுகிறது.

பூமியின் வடக்கு பகுதியில் உள்ளவர்கள் இந்த காலத்தை இளவேனில் காலமாக கணக்கிடுகின்றனர். இந்த நாட்களில் அதிக அளவில் குளிர் நிலவும் என்பதால் மரங்களில் உள்ள இலைகள் விழுந்து பின்னர் புதியதாக துளிர் விடும், இலையுதிர்  காலமாகவும் கருதி விழாக்கள் கொண்டாடுகின்றனர். இந்த நிகழ்வு உலகம் முழுவதும் இரவும் பகலும் ஒரே அளவாக இருக்கும். அதாவது இரவு 12 மணி நேரம், பகல் 12 மணி நேரம் இருக்கும். செப்டம்பர் 23ம் தேதிக்கு பிறகு இந்தியாவில் பகல்  நேரம் என்பது படிப்படியாக குறைந்துகொண்டே வரும்.

Tags : meteorologists ,world , meteorologists, Last night, world, daylight,equal time
× RELATED யுரோ கோப்பை கால்பந்து இன்று ஜெர்மனியில் தொடக்கம்