×

சென்னை தொழிலதிபர் வீட்டில் 120 சவரன் கொள்ளை ராஜஸ்தான் மாநில பஹ்ரியா கும்பலை சேர்ந்த 7 பேர் கைது

* சென்னையில் 2017ம் ஆண்டு முதல் கைவரிசை காட்டினர்
* கூடுதல் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்ஹா தகவல்

சென்னை: சென்னையில் நாடோடிகள் போல் முகாமிட்டு பூட்டிய வீடுகளில் தொடர் கைவரிசை காட்டி வந்த ராஜஸ்தான் மாநிலத்ைத சேர்ந்த பஹ்ரியா கொள்ளை கூட்டத்தை சேர்ந்த 7 பேரை, சிசிடிவி பதிவு மூலம் அடையாளம் கண்டு கைது  செய்யப்பட்டதாகவும், கடந்த 2017ம் ஆண்டும் முதல் நகரில் கைவரிசை காட்டியதாகவும் கூடுதல் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.சென்னை நங்கநல்லூரை சேர்ந்த கிரானைட் தொழிலதிபர் ரமேஷ் (52) வீட்டில் 120 சவரன் தங்க நகைகளும், 10 சவரன் வைரம் பதிக்கப்பட்ட நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது. பழவந்தாங்கல் போலீசார் வழக்கு  பதிவு ெசய்து விசாரித்து வந்தனர். சிசிடிவி காட்சிகள் மூலம் வடமாநில கொள்ளை கும்பல் இதில் ஈடுபட்டது தெரிந்தது. அதைதொடர்ந்து கூடுதல் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்ஹா, இணை கமிஷனர் மகேஸ்வரி உத்தரவுப்படி இரண்டு உதவி கமிஷனர்கள் தலைமையில் 6  இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. கொள்ளை கும்பல் ஜெய்ப்பூர் விரைவு ரயில் மூலம் ராஜஸ்தான் தப்பி சென்றது தெரியவந்தது. இத்தகவல் அனைத்து ரயில்வே போலீசாருக்கும் அனுப்பப்பட்டது. மத்திய பிரதேசம் நக்டா ரயில் நிலையம் வந்த போது ரயில் நிலைய  இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் புகைப்படங்கள் உதவியுடன் 7 பேர் கொண்ட கொள்ளை கும்பலை மடக்கி பிடித்தனர். இதுபற்றி தமிழக தனிப்படை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தனிப்படை போலீசார் மத்திய  பிரதேசத்துக்கு விமானம் மூலம் சென்று கொள்ளை சம்பவம் நடந்த 24 மணி நேரத்தில் 7 குற்றவாளிகளையும் கைது ெசய்தனர். அவர்களிடம் இருந்து 120 சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

 கைது ெசய்யப்பட்ட 7 வடமாநில கொள்ளை கும்பலின் பின்னணி குறித்து போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ேநற்று கூடுதல் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்ஹா கூறியதாவது: கொள்ளையர்கள் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த மிகப்பெரிய கொள்ைள கும்பலான பஹ்ரியா கூட்டத்தை சேர்ந்த ராம்நிவாஸ்(30), ராம்திமியா(20), கைலாஷ்(18), கலுராம்(23), கரோவ்(19), கடு(18), சம்பவ்ரியா(20). 2017ம் ஆண்டு தாம்பரம் சி.டி.ஓ.  காலனியில் உள்ள ராம் என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்து 351 சவரன் தங்க நகைகள் மற்றும் ₹11 லட்சம் பணத்தை கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டுள்ளனர். அதேபோல், கடந்த 18ம் தேதி ஆதம்பாக்கம், மகாலட்சுமி நகர் 4வது தெருவில் எழுமலை என்பவர் வீட்டின் பூட்டை உடைத்து 10.5 சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் கொள்ளையடித்ததும் தெரியவந்துள்ளது.பஹ்ரியா கொள்ளை கும்பலை சேர்ந்த இவர்கள் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து ரயில் மூலம் முன் பதிவு செய்யாத பெட்டிகளில் 8 அல்லது 10 பேர் பயணம் செய்து சென்னைக்கு வருவார்கள். அப்படி வரும் இவர்கள் சென்னையில்  நடைபாதை, ரயில் நிலையம், பேருந்து நிலையங்களில் நாடோடிகள் போல் தான் தங்குவார்கள். அப்படி தங்கி பகல் நேரத்தில் 3 பேர் கொண்ட குழுக்களாக பிரிந்து நடந்தே பூட்டி கிடக்கும் பங்களாக்கள் மற்றும் வீடுகளை நோட்டமிடுவார்கள்.
தேர்வு ெசய்த வீட்டின் அருகே நடைபாதை அல்லது சாலையோரம் நாடோடிகள் போல் தங்கி கண்காணிப்பார்கள். பிறகு பகல் நேரத்தில் திட்டமிட்டப்படி வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்து கொண்டு முன்பதிவு செய்யாத ரயில்  பெட்டியில் பயணி போல புறப்பட்டு ராஜஸ்தான் சென்று விடுவார்கள்.

இதுபோல் கடந்த 2017ம் ஆண்டு முதல் கைவரிசை காட்டியுள்ளனர். கைதான 7 பேர் கொண்ட பஹ்ரியா கும்பலை ெசன்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினால் தான் எத்தனை இடங்களில் கைவரிசை காட்டியுள்ளனர் என்று  தெரியவரும். ரயில்வே போலீசாரிடம் சிக்காமல் இருக்க இந்த கொள்ளை கும்பல் முன் பதிவு செய்யாத பெட்டிகளில் கூட்ட நெரிசலில் பயணம் ெசய்து வந்துள்ளனர்.கைது ெசய்யப்பட்ட 7 பேரையும் மத்திய பிரதேச மாநில நீதிமன்றதில் ஆஜர்படுத்தி தனிப்படை போலீசார் அழைத்து வருகின்றனர்.


Tags : robbers ,Chennai ,businessman ,house ,gang ,Rajasthan ,Bahria , 120 shaving robbery , Chennai, 7 arrested, Rajasthan Bahria, gang
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...