×

பாஜ எம்எல்ஏ மீது வழக்குபதிவு

பல்லியா: உத்தரப் பிரதேசத்தில் மின்வாரிய அதிகாரியை மிரட்டியதாக பா.ஜ எம்.எல்.ஏ சுரேந்திர சிங் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடக்கிறது. உ.பி பரியா தொகுதி பா.ஜ எம்.எல்.ஏ சுரேந்திர சிங். இவர் இந்த மாத தொடக்கத்தில் மின்வாரிய கண்காணிப்பு இன்ஜினியர் ராம் கிஷோர் என்பரை செல்போனில் தொடர்புக் கொண்டு, ஜூனியர் இன்ஜினியர் ஒருவரை பணிமாற்றம் செய்யும்படி  கூறியுள்ளார். அவரை பணிமாற்றம் செய்வதில் சிக்கல்கள் உள்ளதாக எம்எல்ஏ.விடம் ராம் கிஷோர் விளக்கினார். இதனால் கோபம் அடைந்த எம்எல்ஏ, ராம் கிஷோரை தகாத வார்த்தைகளால் திட்டி, மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்து மூத்த அதிகாரிகளிடம், காவல்துறையிலும் ராம் கிஷோர் புகார் தெரிவித்தார். எம்எல்ஏ போனில் பேசிய பேச்சையும் பதிவு செய்து ஆதாரமாக கொடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து எம்எல்ஏ சுரேந்திர சிங் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Baja MLA Baja MLA of Prosecution , Prosecution , Baja MLA
× RELATED தேர்தல் நெருங்குவதையொட்டி திமுக...