×

வெங்காயத்தை தொடர்ந்து பூண்டு விலை கடும் உயர்வு: கிலோ 250க்கு விற்பனை

சென்னை: வெங்காயத்தை தொடர்ந்து, பூண்டு விலை  கடுமையாக உயர்ந்துள்ளது.  ஒரு கிலோ ரூ.250க்கு விற்கப்படுவதால் இல்லத்தரசிகளுக்கு ரசம் வைப்பதிலும்  சிக்கல் ஏற்பட்டு உள்ளது.பூண்டு விளைச்சல் செய்ய சரியான குளிர்ச்சி  நிலையும், சூரிய வெப்பநிலையும் அவசியம் என்பதால் வடமாநிலங்களில் விளைச்சல்  செய்யப்படுகிறது. வடமாநிலங்களான மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான்,  உத்தரப்பிரதேசம் மற்றும் இமாச்சல பிரதேசம் போன்ற பகுதியில் பூண்டு  விளைச்சல் செய்யப்பட்டு தமிழகத்தில் விற்பனை செய்யப்படுகிறது.தற்போது  பூண்டு விலை வரலாறு காணாத வகையில் அதிகரிக்க தொடங்கியுள்ளது.  இந்தியாவிற்கு மலைப்பூண்டு சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.  இது தற்போது அடியோடு நின்றுள்ளது. அது மட்டுமல்லாமல் தமிழகத்தில் தேனி,  கம்பம், போடி உள்ளிட்ட பகுதியில் பூண்டு விளைச்சல் குறைந்துள்ளது. இதனால்  பூண்டுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக கடந்த மாதம்  ரூ.150க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ மலைப்பூண்டு தற்போது ரூ.250 ஆக  உயர்ந்துள்ளது. மலைப்பூண்டு 2ம் ரகம் ரூ.120ல் இருந்து ரூ.220 ஆக விலை  அதிகரித்துள்ளது. நாட்டுப்பூண்டு முதல் ரகம் ரூ.120ல் இருந்து 200 ஆகவும்,  2ம் ரகம் ரூ.100ல் இருந்து ரூ.150 ஆகவும் விலை உயர்ந்துள்ளது. இதுகுறித்து  வியாபாரிகள் கூறுகையில், ‘நடப்பாண்டு பூண்டு வரத்து குறைந்துள்ளது.  இதனால், அதன் விலை உயர்ந்துள்ளது. தொடர்ந்து பூண்டு விலை உயரும். வரும்  பிப்ரவரி மாதத்திற்கு பிறகுதான் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது’  என்றனர். கடந்த மாதங்களில் பூண்டு விலை கிலோ ரூ.50 முதல் ரூ.60 வரை  மட்டுமே விற்பனையான நிலையில் தற்போது ரூ.250 வரை அதிகரித்துள்ளது.  தொடர்ந்து உயரும் என்பதால், ரசம் வைக்க முடியாமல் ஏழை, நடுத்தர இல்லத்தரசிகள் கவலையில் உள்ளனர்.

Tags : Onion, garlic and rise in prices
× RELATED சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின்...