×

சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு: பெங்களூரு விமானத்தில் திடீர் இயந்திர கோளாறு: 78 பயணிகள் அதிஷ்டவசமாக தப்பினர்

சென்னை: சென்னையில் இருந்து பெங்களூரு செல்லும் தனியார் பயணிகள் விமானம் நேற்று காலை 7.20 மணிக்கு சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டது. விமானத்தில் 78 பயணிகள், 5 விமான சிப்பந்திகள் என 83 பேர் இருந்தனர். விமானம், ஓடுபாதையில் ஓட துவங்குவதற்கு முன்னதாக விமானத்தின் இயந்திரங்களை விமானி சரிபார்த்தார். அப்போது, விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு இருந்ததை கண்டுபிடித்தார். இந்நிலையில், விமானத்தை இயக்கினால் பறக்கும்போது பிரச்னைகள் ஏற்பட்டு அசம்பாவித சம்பவம் நிகழலாம் என்று கருதிய விமானி உடனடியாக சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். உடனே, விமானத்தை இயக்க வேண்டாம் என்று தகவல் கிடைத்தது.

அதன் பின்பு இழுவை வண்டி மூலமாக விமானம் புறப்பட்ட இடத்துக்கே வந்து நிறுத்தப்பட்டது. பயணிகள் அனைவரும் விமானத்தில் இருந்து கீழே இறக்கப்பட்டு ஓய்வு அறையில் தங்கவைக்கப்பட்டனர். விமானப் பொறியாளர்கள் விமானத்தை பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் உடனடியாக பழுதுபார்க்க முடியவில்லை. காலதாமதம் ஏற்படும் என தெரியவந்தது. இதையடுத்து மாற்று விமானத்தில் பயணிகள் ஏற்றப்பட்டு காலை 10.15 மணிக்கு மூன்று மணி நேரம் தாமதமாக பெங்களூருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்

Tags : passengers ,accident ,Chennai airport ,airport ,Chennai , Chennai airport, Bangalore flight, engine failure
× RELATED சென்னை – மொரிஷியஸ் விமான சேவை தொடக்கம்