அமைச்சர்களுக்காக காக்கவைத்தபோது ஓய்வுபெற்ற அரசு ஊழியர் இறந்தது வேதனை தருகிறது: மு.க.ஸ்டாலின் டிவிட்

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் கூறியுள்ளதாவது: சேலத்தில் அதிமுக அமைச்சர்கள் பங்கேற்ற விழாவில் ஓய்வுப்பெற்ற அரசு ஊழியர் மயங்கி விழுந்து உயிரிழந்ததற்கு, வருத்தம் தெரிவித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: அமைச்சர்களுக்காக காக்க வைக்கப்பட்டதால் மயங்கி விழுந்து ஓட்டுநர் மணி இறந்திருப்பது வேதனைக்குரியது. இறந்தவரின் குடும்பத்திற்கு, ஆட்சியாளர்கள் உரிய இழப்பீடும், நியாயமும் வழங்கிட வேண்டும். சுயவிளம்பரத்திற்காக அமைச்சர்கள் இத்தகைய போக்குகளைக் கைவிட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

Related Stories: