×

சீர்காழி அருகே ஓஎன்ஜிசி பைப் புதைக்க பள்ளம் தோண்டியதால் வாய்க்காலில் நீர்வரத்து தடை 500 ஏக்கர் சாகுபடி பாதிப்பு

சீர்காழி: சீர்காழியில் ஓஎன்ஜிசி பைப் பதிக்க வாய்க்காலில் பள்ளம் தோண்டியதால் வாய்க்கலுக்கு தண்ணீர் வருவது தடைபட்டுள்ளது. இதனால் 500 ஏக்கர் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். சீர்காழி அருகே காத்திருப்பு இரட்டை வாய்க்காலிருந்து காவளம்பாடி வாய்க்கால் பிரிந்து நாங்கூர் கீழ சட்டநாதபுரம் காவளம்பாடி நாராயணபுரம் சித்தன் காத்திருப்பு மங்கைமடம் வழியாக சென்று காவிரி நீர் கடலில் கலக்கிறது. இந்த வாய்க்காலில் வரும் தண்ணீரை பயன்படுத்தி அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் சுமார் 500க்கும் மேற்பட்ட ஏக்கரில் நடவு பணிகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், நாங்கூர் பகுதியில் ஓஎன்ஜிசி நிறுவனம் கெயில் நிறுவன உதவியுடன் எரிவாயு கொண்டு செல்வதற்காக பைப் புதைக்க காவளம் பாடி வாய்க்காலில் பள்ளம் தோண்டியதால் காவளம்பாடி வாய்க்காலில் தண்ணீர் செல்வது தடைபட்டு வாய்க்காலில் வரும் தண்ணீர் தேங்கி நடவு செய்த வயல்களில் புகுந்து வருகிறது. இதனால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. மேலும் கீழ சட்டநாதபுரம் காவளம்பாடி நாராயணபுரம் சித்தன் காத்திருப்பு பகுதிகளில் பள்ளம் தோண்டிய காரணத்தால் காவளம்பாடி வாய்க்காலில் தண்ணீர் செல்வது தடைபட்டுள்ளது. இதனால் விவசாயிகள் விவசாய பணிகளை செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். 500 ஏக்கர் சாகுபடி பணி பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் நடவு பணிகளுக்காக விடப்பட்ட நாற்றுகள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும் உருவாகியுள்ளது. காவளம்பாடி வாய்க்காலில் பள்ளம் தோண்டி பல மாதங்கள் கடந்தும் அதனை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கவில்லை என விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என விவசாயிகள் தெரிவித்துள்ளர். விவசாயிகளின் நலன் கருதி காவளம்பாடி வாய்க்காலில் ஓஎன்ஜிசி நிறுவனம் கெயில் நிறுவன உதவியுடன் பைப் புதைக்க தோண்டிய பள்ளத்தை உடனடியாக சரி செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : ONGC ,site ,Sirkazhi , Derailment, ONGC, crater, water flow in the mouth
× RELATED பாகிஸ்தானில் X தளத்திற்கு தடை:...