×

2வது நாளாக ஏற்றத்துடன் முடிந்த வர்த்தகம்: குறியீட்டெண் சென்செக்ஸ் 1,075 புள்ளிகள் உயர்ந்து 39,090ல் நிறைவு

மும்பை: மும்பை பங்குச்சந்தை நாளின் இறுதியில் குறியீட்டெண் சென்செக்ஸ் 1,075 புள்ளிகள் உயர்ந்து 39,090ல் வர்த்தகம் நிறைவடைந்துள்ளது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃ ப்டி 329 புள்ளிகள் குறைந்து 11,603 இல் வணிகம் நிறைவு பெற்றுள்ளது. கார்ப்பரேட் வரி விகிதம் குறைப்பு உள்ளிட்ட மத்திய நிதியமைச்சரின் அறிவிப்புகளால் கடந்த வெள்ளிக்கிழமை பங்குசந்தைகளில் மிகப்பெரும் எழுச்சி ஏற்பட்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 2000 புள்ளிகள் வரை உயர்ந்து 38 ஆயிரத்து 143க்கு வர்த்தகம் ஆனது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் 600 புள்ளிகள் உயர்ந்து 11 ஆயிரத்து 315க்கு வர்த்தகம் ஆனது. இதனால் பெரும்பாலான நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்தன. அந்த நாளின் இறுதியில் மும்பை பங்குச்சந்தை எண் குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,961 புள்ளிகள் அளவுக்கு உயர்ந்தது. இது பங்குச்சந்தை வரலாற்றில் ஒரே நாளில் ஏற்பட்ட 2வது மிகப்பெரிய உயர்வாக அமைந்தது. இதனால் முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பு 7.1 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ஒரே நாளில் அதிகரித்ததாக கூறப்படுகிறது.

மும்பை பங்குச்சந்தையின் ஒட்டுமொத்த சந்தை மூலதன மதிப்பு 145 லட்சம் கோடியாக உயர்ந்து 2 ட்ரில்லியன் டாலர்களை கடந்தது. இந்த நிலையில், இரு நாள் விடுமுறைக்கு பிறகு வாரத்தின் முதல் நாளான இன்றும் இந்திய பங்குசந்தைகளில் எழுச்சி காணப்பட்டது. பங்குசந்தைகளில் வர்த்தகம் துவங்கிய உடனேயே சென்செக்ஸ் சுமார் 1000 புள்ளிகள் உயர்வுடன் தொடங்கியது. அதன்படி, பங்குச்சந்தை தொடங்கியவுடன் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 1,072 புள்ளிகள் உயர்ந்து 39,086 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 280 புள்ளிகள் உயர்ந்து 11,555 புள்ளிகளில் தொடங்கியது. மும்பை பங்குசந்தையில் உயர்வுடன் தொடங்கி வர்த்தகம் ஒரு கட்டத்தில் குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,300 புள்ளிகளுக்கும் அதிகமாக உயர்ந்தது. இதேபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி-யும் காலை வர்த்தகத்தின் ஒருகட்டத்தில் 392 புள்ளிகள் வரை அதிகரித்தது. இந்த நிலையில், நாளின் இறுதியில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 1,075 புள்ளிகள் உயர்ந்து 39,090ல் வர்த்தகம் நிறைவடைந்தது. தொடர்ந்து 2வது வர்த்தக நாளாக எழுச்சி காணப்படுவதால் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Tags : Sensex , Trading, index Sensex, rise
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 362 புள்ளிகள் சரிவு!