பாட்னாவில் ஸொமேட்டோவில் 100 ரூபாய் கட்டணத்தை திரும்பப் பெற நினைத்து போலி வாடிக்கையாளர் சேவையால் ரூ.77,000 இழந்த நபர்

பாட்னா: ஸொமேட்டோவில் 100 ரூபாய் கட்டணத்தை திரும்பப் பெற நினைத்த பொறியாளர் ஒருவர் போலி கஸ்டமர் கேரிடம் சிக்கி 77 ஆயிரம் ரூபாயை பறிகொடுத்துவிட்டு காவல்நிலையத்துக்கு அலைந்து கொண்டிருக்கிறார். கடந்த 10-ம் தேதி பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள விஷ்ணு என்ற பொறியாளர் தனக்கான உணவை ஸொமெட்டோ என்ற ஆன்லைன் உணவு டெலிவரி ஆப் மூலம் ஆர்டர் செய்தார். ஆனால் தனக்கு வந்த உணவு மோசமான நிலையில் இருந்ததால், அதை டெலிவரி கொண்டுவந்த இளைஞரிடமே திருப்பி அளித்தார். அந்த இளைஞர் ஏற்க மறுத்தபோது, தன் பணம் தனக்கு திரும்ப வேண்டும் என விஷ்ணு வாதிட்டார். கூகுளில் ஸொமேட்டோ வாடிக்கையாளர் சேவை மையம் எனத் தேடினால் வரும் முதல் எண்ணுக்கு அழைத்தால் அவர்களே தங்கள் பணத்தை தங்களது வங்கி கணக்கில் செலுத்தி விடுவார்கள் எனக் கூறிவிட்டு சென்றதாக விஷ்ணு கூறினார்.

அதன்படி, கூகுளில் முதலில் தோன்றி வாடிக்கையாளர் சேவை மைய எண்ணுக்குத் தொடர்பு கொண்ட போது சிறிது நேரத்தில் தனக்கு ஸொமெட்டோவில் இருந்து பேசுவதாகக் கூறி ஒருவர் அழைத்ததாக விஷ்ணு குறிப்பிட்டுள்ளார். 100 ரூபாய் பில் தொகையை திரும்பி வழங்குவதாகவும், ரீஃபண்ட் பெற 10 ரூபாய்க்கான பிராசஸிங் கட்டணத்தை தாங்கள் அனுப்பும் லிங்க்-கை கிளிக் செய்து டெபாசிட் செய்யுமாறு அந்த நபர் கூறியுள்ளார். 10 ரூபாய் செலுத்திய சில விநாடிகளில் பே.டி.எம். கணக்கும் மூலம் பல முறை தனது வங்கிக் கணக்கில் இருந்த 77 ஆயிரம் ரூபாய் வரை அடுத்தடுத்து குறைந்துவிட்டதாகவும், சில நிமிடங்களில் நடந்ததை தன்னால் தடுக்க முடியவில்லை என்றும் வேதனை தெரிவித்தார். தற்போது காவல்நிலையம், வங்கி என பல இடங்களுக்கு அலைந்தபோதும் பணம் கிடைக்கவில்லை எனவும் கூறியுள்ளார்.

Related Stories:

>