×

அரசு பள்ளிகளில் மூலிகைத் தோட்டம் அமைத்து மாணவர்களிடம் சுற்றுச்சூழல் ஆர்வத்தை ஊக்குவிக்கும் அறிவியல் ஆசிரியர்

மன்னார்குடி: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே அரிச்சந்திரபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அறிவியல் பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றி வரும் முரளி. இவர் தான் பணியாற்றும் பள்ளியில் 100 க்கும் மேற்பட்ட மூலிகை களை வளர்த்து மூலிகைத் தோட்டத்தை மாணவர்கள் உதவியுடன் உருவா க்கியுள்ளார். மூலிகைத் தோட்டம் மூலம் மாணவர்களிடம் சுற்றுச்சூழல் ஆர்வத்தை ஊக்குவித்து வருகிறார். மேலும் மன்னார்குடி மற்றும் அதன் சுற்றுப்புறமுள்ள பல்வேறு அரசுப் பள்ளிகளில் மூலிகை தோட்டம் அமைக் கும் பணியினை செய்து வருகிறார். அரிச்சந்திரபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள மூலிகைத் தோட்டத்தில் ஐந்து வகையான துளசி, வல்லாரை, திருநீற்றுப் பச் சிலை, வெட்டிவேர், சித்தரத்தை, தழுதாழை, மிளகு, வெற்றிலை, சர்க்கரைக் கொல்லி, சிறுகுறிஞ்சான், கற்றாழை, மருள், ஆனை கற்றாழை, ஆமணக்கு, அத்தி, அகத்தி, இலந்தை, முடக்கற்றான், கற்பூரவல்லி, மூக்கிரட்டை, 2 வகை யான கரிசலாங்கண்ணி, 2 வகையான சங்குப்பூ, இரண்டு வகையான நெல்லி, உள்ளிட்ட 100 வகையான மூலிகைகள் கொண்ட தோட்டத்தை அமைத்துள்ளார். அரிச் சந்திரபுரம் சென்றாலே மூலிகை வாசம் நம்மை பள்ளிக்கு அழைத்துச் செல்கிறது.

இம்மூலிகைத் தோட்டத்தில் உள்ள வல்லாரை, நொச்சி, திருநீற்றுப் பச்சிலை ஆகியவற்றை மாணவர்கள் அன்றாடம் காய்ச்சல், சளி மற்றும் நினைவாற் றல் ஆகியவற்றுக்குப் பயன் படுத்துகின்றனர். மேலும் பொதுமக்கள் அன்றா டம் தங்களின் தேவைக்கு முரளி ஆசிரியரை அணுகி மூலிகைகள் வாங்கிச் செல்கின்றனர். தோட்டத்தில் விளையும் கீரைகள் வாரம் தோறும் பள்ளி சத்துணவிற்கு வழங்கப்படுகிறது. இதுகுறித்து அறிவியல் ஆசிரியர் முரளி கூறுகையில், அறிவியல் ஆசிரியராக பதவி உயர்வில் இப்பள்ளிக்கு வந்த போது குப்பை கொட்டும் இடமாக இருந்த இந்த இடத்தை மூலிகைத் தோட்டம் அமைக்கலாம் என்ற எண்ணம் வந்தது. இதன் மூலம் மாணவர்களிடம் சுற்றுச்சூழல் ஆர்வத்தையும், மரம், செடி கொடிகளை வளர்க்க வேண்டும் என்ற எண்ணத்தை மாணவர்க ளிடத்தில் ஏற்படுத்தலாம் என்ற நோக்கத்தில் ஆசிரியர்களின் ஒத்துழைப்பில் மாணவர்களின் முழுமையான உழைப்பில் இந்த மூலிகைத் தோட்டம் உரு வாக்கப் பட்டது. சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களிலும் பள்ளிக்கு வந்து தோட்டத்தை அமைக்க முடிந்தது.

நமது பள்ளியில் மட்டுமின்றி அனைத்துப் அரசு பள்ளிகளிலும் மூலிகைத் தோட்டம் அமைத்து சுற்றுச்சூழல் ஆர்வத்தை ஏற்படுத்தலாம் என்ற ஆர்வத் தின் அடிப்படையில் மன்னார்குடி அருகில் உள்ள வடபாதி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியிலும், மேலதுளசேந்திரபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியிலும் இங்குள்ள மூலிகைகள் கொண்டு மூலிகைத் தோட்டம் அமைக் கப் பட்டுள்ளது. மன்னார்குடி கோபாலசமுத்திரம் நடுநிலைப்பள்ளி, வேற்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் அடுத்து மூலிகைத் தோட்டம் அமை க்கும் பணியினை தொடங்கிட உள்ளேன் என்று கூறினார்.

Tags : Science teacher ,government schools ,garden ,Government School ,Herbal Garden , Government School, Herbal Garden
× RELATED தாவரவியல் பூங்கா புல் மைதானங்களில் புதிய மண் கொட்டும் பணி மும்முரம்