×

கமல் மீது அமைச்சர்கள் பாய்ச்சல்

சென்னை,:   தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில்  அமைச்சர்  கடம்பூர் ராஜூ நேற்று அளித்த பேட்டி: நாங்குநேரி தொகுதி வேட்பாளரை தலைமை அறிவிக்கும்.  ஊழலை பற்றி பேசுவதற்கு கமல்ஹாசனுக்கு என்ன தகுதி  இருக்கிறது. அரசியலில் ஆழம் தெரியாமல் இறங்கி விட்டார். இதில் இருந்து எப்படி வெளியேற வேண்டும் என்று தெரியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறார் என்றார். நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி அளித்த பேட்டியில், நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் அமமுக மற்றும் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாதது அந்த கட்சிகளின் பயத்தை  காட்டுகிறது என்றார்.

Tags : Ministers ,Kamal , Kamal, Ministers, Flow
× RELATED லடாக் சென்று வந்த நிலையில் மூத்த அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை