×

அதிமுகவுக்கு தமாகா ஆதரவு

சென்னை: நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு தமாகா ஆதரவு அளித்து, வாக்கு சேகரித்து அவர்களின் வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும் என்று ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார். தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழகத்தில் காலியாகவுள்ள விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கும், திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்கும் அக்டோபர் 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம்  அறிவித்துள்ளது. இந்த இரண்டு தொகுதி இடைத்தேர்தலிலும் அதிமுகவின் வேட்பாளர்களை தமாகா ஆதரிக்கிறது. இரண்டு தொகுதிகளிலும் தமாகாவின் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் அதிமுக வெற்றியை உறுதி செய்யக்கூடிய  வகையிலே களப்பணியாற்றுவார்கள். எனவே விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு தமாகா முழு அதரவு அளிக்கிறோம்.

Tags : Tamaka ,AIADMK ,AIADMK Tamaga , AIADMK, Tamaga ,support
× RELATED சீனாவிற்கு தொடர்ந்து ஆதரவு; உலக...