×

பொதுப்பணித்துறை அதிகாரிகள் பிடிவாதம் காரணமாக வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணி நிறுத்தம்? : பேக்கேஜ் டெண்டர் வழக்கில் தடை உத்தரவால் சிக்கல்

சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் இரண்டாவது வாரத்தில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பருவமழையையொட்டி அடையாறு, பக்கிங்காம் கால்வாய், கூவம், கொசஸ்தலையாறு படுகைகள் மற்றும்  கால்வாய்களில் தண்ணீர் செல்ல வசதியாக வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை செப்டம்பர் முதல்வாரத்தில் தொடங்கியிருக்க வேண்டும். அப்போது, தான் மழை காலங்களில் கால்வாய் வழியாக எளிதில் மழை நீர் கடலுக்கு செல்ல ஏதுவாக இருக்கும் என்பதால், பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கால்வாய்களை தூர்வாருவதற்காக பொதுப்பணித்துறை சார்பில் கடந்த  சில நாட்களுக்கு ரூ.7.65 கோடி நிதி கேட்டு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின் பேரில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு 51 பணிக்கு ₹7.65 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து பொதுப்பணித்துறை சார்பில் ஒப்பந்த நிறுவனம் தேர்வு செய்யும் வகையில் குறுகிய கால டெண்டர் விடப்பட்டது. இந்த ெடண்டர் வழக்கத்திற்கு மாறாக பேக்ேகஜ் அடிப்படையில் விட தீர்மானிக்கப்பட்டது. ஆனால், இதற்கு  சிறிய கான்ட்ராக்டர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், இது தொடர்பாக அவர்கள் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ேபக்கேஜ் டெண்டர் வழக்கில் தமிழக அரசு பதில் அளிக்கும் வரை டெண்டர் நடைமுறையை நிறுத்தி வைக்க உத்தரவிட்டது. இதன் காரணமாக   வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்ைக பணிகளை தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், அக்டோபரில் வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில், பொதுப்பணித்துறை உயர் அதிகாரிகள் பிடிவாதம் காட்டாமல் பேக்கேஜ் என்று இல்லாமல் சிறிய கான்ட்ராக்டர்கள் பணி செய்யும் வகையில் டெண்டர் விட  நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், கால்வாய்களை தூர்வாரும் பணி தாமதம் ஏற்பட்டு சென்னை மாநகர் வெள்ளத்தில் சிக்கும் அபாயம் ஏற்படும் நிலை உருவாக வாய்ப்புள்ளது.

Tags : Public Works Officers : Prohibition , stubbornness , public works , Precautionary ,package tender
× RELATED கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் விமான...