×

‘7 எப்’ பஸ்சை காணோம்: போக்குவரத்து துறைக்கு கடிதம்

சென்னை: வழக்கறிஞர் தங்கராஜூ என்பவர், போக்குவரத்து துறை அரசு முதன்மை செயலாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: அண்ணாநகர் மேற்கு பேருந்து நிலையத்தில் இருந்து (தடம் எண். 7எப்) என்ற 16 மாநகர பேருந்துகள் பாரிமுனைக்கு இயக்கப்பட்டது.  இதுபடிப்படியாக குறைந்து ஜூலை 2019 வரையில் 2 பேருந்துகள் மட்டும் இயக்கப்பட்டன. 1.8.19 முதல் அந்த 2 பேருந்துகளையும் கிளை மேலாளர் எங்கே அனுப்பினார் என்று தெரியவில்லை.
இதனால் பலர் பாதிக்கப்படுகின்றனர். பேருந்து நிலைய கிளை மேலாளர் பணத்திற்காக அண்ணாநகர் மேற்கு பணிமனையை அடகு வைத்துவிட்டார். மேற்கண்ட பேருந்து சேவையை ரத்து செய்ய யார் உத்தரவிட்டது. அதன் விவரத்தை உடனடியாக தெரிவிக்க வேண்டும்.

நிறுத்தப்பட்ட பேருந்து சேவையை மீண்டும் இயக்க அரசு செயலாளர் ஆணை பிறப்பிக்க வேண்டும். இல்லையென்றால் உயர் நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு தாக்கல் செய்யப்படும். இதில், தொடர்புடைய அலுவலர்கள் மீது தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Tags : Transport Department Times 7 , Times 7, look , bus: Letter , Transport Department
× RELATED நெல்லை புதிய பஸ் நிலையத்தில் மீண்டும் மார்க்கெட் திறப்பு