×

பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த 15 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் நிதி: முதல்வர் உத்தரவு

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை நீலாங்கரையை சேர்ந்த ரமேஷ் என்பவர் கழிவுநீர் தொட்டி அமைக்கும் பணியின்போது மண் சரிந்து உயிரிழந்தார். அண்ணாநகரை சேர்ந்த ஆனந்த லட்சுமி ஆட்டோவில் சென்றபோது மரம் முறிந்து விழுந்ததில் உயிரிழந்தார். திருவள்ளூர் மாவட்டம் சென்றாயன்பாளையம் கிராமத்தை சேர்ந்த கிரிஜா சாலை விபத்தில் உயிரிழந்தார். காஞ்சிபுரம் மாவட்டம், கொல்லச்சேரி கிராமத்தை சேர்ந்த சிறுமி மாசாணி என்பவர் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்தார்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த  காடாம்புலியூர் கிராமத்தை சேர்ந்த சந்தோஷ்குமார் மற்றும் சக்தி சிவகண்ணன்  ஆகிய 2 மாணவர்கள் சுதந்திர தின விழாவில் பங்கேற்று விட்டு, பைக்கில்  சென்றபோது விபத்தில் சிக்கி உயிரிழந்தனர். இவ்வாறு பல்வேறு விபத்துக்களில் உயிரிழந்த 15 பேரின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். மேற்கண்ட சம்பவங்களில் உயிரிழந்த 15 நபர்களின் குடும்பத்திற்கு தலா ₹1 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

Tags : incidents , 15 lakhs ,lost, various,incidents, Rs
× RELATED மேற்கு வங்க டிஐஜி நீக்கம்: தேர்தல் ஆணையம் அதிரடி