×

பான் பசிபிக் ஓபன் ஒசாகா சாம்பியன்

டோக்கியோ: பான் பசிபிக் ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில், ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா சாம்பியன் பட்டம் வென்றார். தனது சொந்த ஊரான ஒசாகாவில் நடைபெற்ற இந்த தொடரின் பைனலில் ரஷ்யாவின் அனஸ்டேசியா பாவ்லியுசென்கோவாவுடன் மோதிய நவோமி ஒசாகா 6-2, 6-3 என்ற நேர் செட்களில் எளிதாக வென்று கோப்பையை முத்தமிட்டார். இப்போட்டி 1 மணி, 9 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது.கடந்த ஜனவரியில் ஆஸ்திரேலியன் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற ஒசாகா, அதன் பிறகு விளையாடிய எந்த தொடரிலும் பட்டம் வெல்ல முடியாமால் தடுமாறி வந்தார். தரவரிசையிலும் நம்பர் 1 அந்தஸ்தை பறிகொடுத்த அவருக்கு, பான் பசிபிக் ஓபனில் சாம்பியனானது புதிய உற்சாகத்தை கொடுத்துள்ளது.Tags : Pan Pacific Open Osaka Champion , Pan Pacific, Open, Osaka ,Champion
× RELATED ட்வீட் கார்னர்...2 காலிலும் ஆபரேஷன்!