×

கீழப்பாவூர் கிருஷ்ணன் கோவிலில் சிறப்பு பூஜை

பாவூர்சத்திரம்: கீழப்பாவூர் கிருஷ்ணன் கோவிலில் புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. கீழப்பாவூர் தமிழர்த்தெரு ஸ்ரீருக்மணி சத்யபாமா சமேத ஸ்ரீவேணுகோபால கிருஷ்ணன் சுவாமி கோவிலில் நேற்று புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜைகளும், கருட சேவையையொட்டி நேற்று காலை காலை 7.30 மணிக்கு கும்ப ஜெபம், 8 மணிக்கு விசேஷ அபிஷேகம், 8.30க்கு தீபாராதனை, பிரசாதம் வழங்குதல்,

மாலை 6.30க்கு சாயரக்க்ஷை, தீபாராதனை, 7 மணிக்கு சகஸ்ர நாம அர்ச்சனை, 8 மணிக்கு தீபாராதனை,  9 மணிக்கு கருட வாகனத்தில் சுவாமி எழுந்தருளி வீதியுலா நிகழ்ச்சி நடந்தது. இதில் கீழப்பாவூர் வட்டாரத்தை சேர்ந்த ஏராளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை ரவி பட்டாச்சாரியாருடன் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Tags : Special ,Pooja ,Special Pooja ,Kilappavur Krishnan Temple Kilappavur Krishnan Temple , Kilappavur, Krishnan Temple, Special Pooja
× RELATED கோவை நகைக்கடை கொள்ளை: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை