×

வாலாஜா அருகே குண்டும் குழியுமான சாலை

வாலாஜா: வாலாஜா பச்சையம்மன் கோயில் அருகே பெல்லியப்பா நகர் உள்ளது. இங்கிருந்து கச்சால நாயக்கர் தெருவிற்கு செல்ல நீண்ட இணைப்புச்சாலை உள்ளது. இது மாற்றுப்பாதையாக இருப்பதால் நாள்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் இவ்வழியாக செல்கின்றன. ஆனால் பல ஆண்டுகளாக இந்தசாலை குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதற்கிடையே சமீபத்தில் பெய்த பலத்த மழையினால் சாலையின் நடுவே மழைநீர் குளம்போல் தேங்கியுள்ளது.

இதனால் வாகனஓட்டிகளும், பாதசாரிகளும் இவ்வழியாக செல்ல முடியாமல் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : pit road ,Walaja ,Bomb , Walaja, road
× RELATED ஜப்பான் நாகசாகியின் அணுகுண்டு...