×

குலசேகரன்பட்டினத்தில் விஸ்வகர்மா ஜெயந்தி விழா

உடன்குடி: குலசேகரப்பட்டினத்தில் விஸ்வகர்ம ஜெயந்தி கொண்டாடப்பட்டது. நெல்லை ஆதீன மட விஸ்வகர்ம ஜெகத்குரு. ஸ்ரீல ஸ்ரீபுத்தாத்மானந்த சரஸ்வதி சுவாமிகள் தலைமை வகித்தார். குலசேகரப்பட்டினம் விஸ்வகர்ம தொழிலாளர்கள் சங்க தலைவர் லோகநாதன், செயலாளர் முருகன், பொருளாளர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆலோசகர் மாரியப்பன் வரவேற்றார்.

இதில் கொடியேற்றப்பட்டு வழிபாடு நடந்தது. இதில் சட்ட ஆலோசகர் ராமச்சந்திரன், தூத்துக்குடி விஸ்வகர்ம கூட்டுறவு கடன் சங்க தலைவர் கிட்டு, ஸ்ரீஹரிஓம் இந்து சேவா சங்க மாவட்டத் தலைவர் வசந்தகுமார், சுந்தர், சங்க நிர்வாககுழு உறுப்பினர்கள், சங்க உறுப்பினர்கள், சங்க இளைஞரணியினர், மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.

Tags : Viswakarma Jayanthi Festival ,Kulasekaranpattinam , Kulasekaranpattinam, Viswakarma Jayanthi Festival
× RELATED தசரா திருவிழா நிறைவை தொடர்ந்து...