×

களக்காடு வரதராஜபெருமாள் கோயிலில் கருடசேவை விழா

களக்காடு: களக்காடு வரதராஜபெருமாள் கோயிலில் புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு கருடசேவை விழா நடந்தது. களக்காடு வரதராஜபெருமாள் கோயிலில் ஆண்டுதோறும் புரட்டாசி சனிக்கிழமைகளில் கருடசேவை விழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு நேற்று கருடசேவை உற்சவம் கோலாகலத்துடன் நடந்தது. இதையொட்டி பகலில் வரதராஜபெருமாள், வெங்கடாஜலபதி சுவாமிகள், தேவியர்கள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டது. மாலையில் விஷேச அலங்கார தீபாராதனைகள் இடம்பெற்றது.

அதனைதொடர்ந்து இரவில் கருட சேவை நடைபெற்றது. வரதராஜபெருமாள், வெங்கடாஜலபதி சுவாமிகள் தனித்தனி கருட வாகனங்களில் எழுந்தருளி மேளதாளங்கள் முழங்க திருவீதி உலா வந்தனர்.விழாவில் களக்காடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் நீண்டவரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். வருகிற செப் 28, அக் 5, 12 ஆகிய தேதிகளிலும் கருடசேவை நடக்கிறது. இதுபோல திருக்குறுங்குடி திருமலைநம்பி கோயிலிலும் புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடந்தது. மாலையில் கோயில் உள்பிரகாரத்தில் கருட சேவை நடந்தது.


Tags : ceremony ,Kalakkad ,Garuda Seva ,Varadaraja Perumal temple , Kalakkadu Varadaraja Perumal Temple, Garuda Seva Festival
× RELATED வங்கியில் கடனுதவி வழங்கும் விழா