×

கண்டெய்னர் லாரி ஸ்டிரைக் மீண்டும் தொடங்கியது: பேச்சுவார்த்தை திருப்திகரமாக இல்லாததால் இன்று மீண்டும் வேலைநிறுத்த அறிவிப்பு

சென்னை: சென்னையில் கண்டெய்னர் லாரி ஸ்டிரைக் மீண்டும் தொடங்கியது. அதிக அபராதம் விதிக்கப்படுவதால், அதிக பாரம் ஏற்ற மாட்டோம்; கன்டெய்னர் லாரிகளுக்கு உரிய வாடகை நிர்ணயிக்க வேண்டும் எனக்கூறி, கன்டெய்னர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர், கடந்த 16ம் தேதி முதல் வேலைநிறுத்த  போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், 21 சங்கங்கள் பங்கேற்றன.தற்போது,20 அடி கன்டெய்னருக்கு வழங்கப்படும் ரூ2,500 வாடகையை 3,800 ஆகவும் 40 அடி கன்டெய்னருக்கு வழங்கப்படும் ரூ3,500ஐ 4,800 ரூபாயாக உயர்த்தி தர வேண்டும். காலி  கன்டெய்னர் லாரிகளுக்கு வழங்கப்படும் 2,000 வாடகையை, 3,300 ரூபாயாக உயர்த்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.இதை நிறைவேற்றினால், வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்படும் என கன்டெய்னர் லாரி உரிமையாளர்கள்  அறிவித்தனர்.

இதனால் சென்னை துறைமுகம், எண்ணூர் காமராஜர் துறைமுகம், காட்டுப்பள்ளி அதானி துறைமுகத்தில் ஆயிரக்கணக்கான கன்டெய்னர்கள் தேங்கியதால் ஏற்றுமதி, இறக்குமதி பணிகள் பாதிப்புக்குள்ளானது. அரசுக்கு பல கோடி  ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. வேலை நிறுத்தத்தை வாபஸ் பெறக்கோரி, தண்டையார்பேட்டை தாசில்தார் லட்சுமி தலைமையில் கன்டெய்னர் லாரி உரிமையாளர்களுடன் நேற்று மதியம் பேச்சுவார்த்தை நடந்தது. இதில், சரக்கு பெட்டக நிலைய அதிகாரிகள், துறைமுகம் உதவி ஆணையர் கொடிலிங்கம், துறைமுகம் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.பேச்சுவார்த்தை முடிவில், 20 அடி கன்டெய்னருக்கு வாடகை 2,500 ரூபாயில்  இருந்து 3,500 ரூபாயாகவும், 40 அடி கன்டெய்னருக்கு வாடகை 3,500 ரூபாயில் இருந்து 4,500 ரூபாயாகவும் உயர்த்தி தருவதாக வாக்குறுதி அளித்தனர். இதையடுத்து, வேலை நிறுத்தத்தை வாபஸ் பெறுவதாக கன்டெய்னர் லாரி உரிமையாளர் சங்கத்தினர் அறிவித்தனர்.

இந்நிலையில் இன்று காலை 21 சங்கங்களை சேர்ந்த அனைத்து லாரி உரிமையாளர்களும் ராயபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஆலோசனை கூட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து துறைமுக நிர்வாகத்தினர் தற்போது ஒப்புதல் அளித்துள்ள 1000 ரூபாய் வாடகை என்பது தங்களுக்கு போதுமானது என்றும், இதனால் எங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை வேலை நிறுத்தம் தொடரும் என அறிவித்தனர். இதனால் இன்று முதல் மீண்டும் வேலை நிறுத்தம் தொடர்வதாக தெரிவித்துள்ளனர்.


Tags : Container ,Larry Strike ,negotiations ,Container Larry , Container Larry, Strike
× RELATED மாநிலங்களவை சீட் வேண்டும் என்பதில்...