×

கர்நாடகாவில் ஹெல்மெட் அணியாமல் வரும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோல் வழங்கக்கூடாது: காவல் ஆணையர் அதிரடி

பெங்களூரு: கர்நாடகாவில், ஹெல்மெட் அணியாமல் வரும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு எரிபொருள் வழங்கக்கூடாது என பங்க் உரிமையாளர்களுக்கு காவல் ஆணையர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். நாடு முழுவதும் அதிகரித்து வரும் சாலை விபத்துகளை கட்டுப்படுத்த, மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டு, அதிக அபராத தொகையும் வசூலிக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் இருசக்கர வாகன ஓட்டிகளிடம் ஹெல்மெட் அணிவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த கர்நாடகாவின் கலபுராகி பகுதி காவல் ஆணையர் ஒருவர் புதிய முயற்சியை கையாண்டுள்ளார்.அதன்படி, கலபுராகியில் இயங்கும் சுமார் 50 பெட்ரோல் பங்கின் உரிமையாளர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்திய அவர், இருசக்கர வாகனம் வைத்திருந்தும், ஹெல்மெட் இன்றி வரும் வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோல் வழங்கக்கூடாது என அறிவுறுத்தியுள்ளார். அதுமட்டுமல்லாது முதல் ஒருவாரத்துக்கு வாடிக்கையாளர்களிடம் அதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அதன் பிந்தைய வாரங்களில் ஹெல்மெட் அணியாத வாடிக்கையாளர்களுக்கு பெட்ரோல் வழங்குவதை நிறுத்தவும் உத்தரவிட்டுள்ளார்.


Tags : Motorists ,Karnataka ,Police Commissioner , Karnataka, Helmet, Petrol, Police Commissioner Action
× RELATED தேர்தல் பணிகளில் சிறப்பாக பணியாற்றிய...