×

உலக மல்யுத்த இறுதிப் போட்டி: காயம் காரணமாக வெளியேறிய இந்திய வீரர் தீபக் பூனியாவுக்கு வெள்ளிப்பதக்கம்

நூர் சுல்தான்: உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடரின் ஆண்கள் 86 கிலோ பிரீஸ்டைல் பிரிவில் இந்திய வீரர் தீபக் பூனியா இறுதிப் போட்டியில் காயம் காரணமாக வெளியேறியதால் வெள்ளிப்பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. கஜகஸ்தானில் நடைபெற்று வரும் இந்த தொடரின் அரை இறுதியில், சுவிட்சர்லாந்தின் ஸ்டீபன் ரெய்ச்முத்துடன் நேற்று மோதிய தீபக் பூனியா (20 வயது) 8-2 என்ற புள்ளிக் கணக்கில் அபாரமாக வென்று பைனலுக்கு முன்னேறினார்.

இதன் மூலமாக தங்கம் அல்லது வெள்ளிப் பதக்கம் வெல்லும் வாய்ப்பை பெற்றுள்ள அவர், இந்தியாவுக்காக ஒரு ஒலிம்பிக் ‘கோட்டா’ இடத்தையும் உறுதி செய்து அசத்தினார். இறுதிப் போட்டியில் அவர், 2016 ரியோ ஒலிம்பிக்சில் தங்கப் பதக்கம் வென்ற ஈரான் வீரர் ஹாசன் யாஸ்தானிசராட்டியை இன்று எதிர்கொண்டபோது, காயம் காரணமாக போட்டியிலிருந்து வெளியேறினார். இந்நிலையில்,  இந்திய வீரர் தீபக் பூனியாவுக்கு வெள்ளிப்பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Deepak Pooniah ,World Wrestling Final ,finalist ,World Wrestling ,Indian , World Wrestling finalist: Indian player Deepak Pooniah wins silver medal due to injury
× RELATED கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா