×

கடந்த 7 ஆண்டுகளில் காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் 7,000 முறை தாக்குதல்: 758 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை....ஆர்டிஐ மூலம் தகவல்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் எல்லையில் கடந்த ஏழு ஆண்டுகளில் பாகிஸ்தான் ராணுவம் 7 ஆயிரம் முறை எல்லைதாண்டி அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது தெரியவந்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம் தகவல் அறியும் சட்டத்தின்படி எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் இந்த விவரத்தை தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு 2140 துப்பாக்கிச் சண்டைகளில் இந்தியா 11 வீரர்களை இழந்துள்ளது.

80 வீரர்கள் காயம் மற்றும் ஊனம் அடைந்தனர். இது தவிர மிகப்பெரிய தீவிரவாதத் தாக்குதல்களையும் பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்தியா மீது தொடுத்து வருகின்றனர். 1694 முறை தீவிரவாதிகள் எல்லை தாண்டி ஊடுருவிய சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. கடந்த ஆறு ஆண்டுகளில் தீவிரவாதத் தாக்குதல்களில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். 758 தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்தியாவின் முக்கிய நகரங்களில் தாக்குதல் நடத்தும் சதித்திட்டத்துடன் 60 தீவிரவாதிகள் இந்திய எல்லைக்குள் ஊடுருவியிருக்கலாம் என்று உளவுத்துறையினர் எச்சரித்துள்ளனர்.



Tags : militants ,army attacks ,times ,Kashmir ,Pakistani , Pakistani army attacks 7,000 times in Kashmir over the past 7 years: 758 militants shot dead
× RELATED சென்னையில் விமான டிக்கெட் கட்டணம் பல மடங்கு உயர்வு: பயணிகள் அதிர்ச்சி!