×

திருவனந்தபுரம் அருகே சொத்துக்காக உணவு, தண்ணீரின்றி தாயை பூட்டி வைத்த மகன்

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் அருகே சொத்துக்காக 75 வயது தாயை உணவு, தண்ணீர் கொடுக்காமல் வீட்டுக்குள் பூட்டி வைத்த மகனை போலீசார் கைது செய்தனர்.திருவனந்தபுரம்   அருகே பாலராமபுரம் ரசல்புரம் பகுதியைச் சேர்ந்தவர் லலிதா(75). இவருக்கு ஜெயகுமார்(45) என்பவர் உட்பட 4 பிள்ளைகள் உள்ளனர். மற்ற 3 பேரும்   திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். ஜெயகுமாருடன் தாய்  லலிதா  வசித்து  வருகிறார். லலிதாவின் பெயரில் 30 சென்ட் நிலமும், வீடும்,  வங்கியில் 14  லட்சம் பணமும் உள்ளது. ஜெயகுமார் தாயை மிரட்டி இவற்றை தனது  பெயருக்கு எழுதி  வாங்கி உள்ளார். இது சகோதரர்களுக்கு ெதரியாமல்  இருக்க  அவர்கள் யாரையும் வீட்டுக்குள் அனுமதிப்பதில்லை.இந்த  நிலையில்  கடந்த சில மாதங்களாக ஜெயகுமார் தாய்க்கு சரியாக உணவு கொடுக்காமலும்,  பராமரிக்காமலும் அவரை வீட்டில் பூட்டி  வைத்திருந்தார். இதனால் அவரது  உடல்நிலை நாளுக்கு நாள் மிகவும் மோசமானது. மேலும்  உடலில் புண்களும்  ஏற்பட்டு அவை அழுகி கடும் வலியை ஏற்படுத்தியது. இதனால் வலி பொறுக்க  முடியாமல் லலிதா அலறினார். அவரது அலறல் சப்தம் கேட்டு அப்பகுதியினர்  பாலராமபுரம் கிராம  பஞ்சாயத்து தலைவி வசந்தகுமாரிக்கு  தகவல் தெரிவித்தனர்.  இதைத்தொடர்ந்து  வசந்தகுமாரி மற்றும் பஞ்சாயத்து உறுப்பினர்கள் அங்கு  விரைந்து சென்றனர்.

அவர்கள் ஜெயகுமாரிடம் வீட்டை திறக்குமாறு  கூறினர். ஆனால் அவர் வீட்டை திறக்க மறுத்து விட்டார்.  இதையடுத்து  பாலராமபுரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடம்  விரைந்து வந்து பேச்சுவார்த்தை   நடத்தியும் ெஜயகுமார் கதவை திறக்கவில்லை. இதனால்  வேறு வழியின்றி போலீசார் காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து வீட்டின் கதவை  உடைத்து உள்ளே  சென்றனர். அப்போது லலிதா உடலில் புழுக்கள் அரித்து ஆபத்தான  நிலையில்  உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். அவரை உடனடியாக மீட்டு  திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக  சேர்த்தனர். மேலும் போலீசார் ஜெயகுமாரை கைது செய்து விசாரித்து  வருகின்றனர்.



Tags : property ,Trivandrum , property ,Trivandrum,food ,water,mother
× RELATED பேர்ப்ரோ 2024 வருடாந்திர சொத்து ரியல்...