×

தந்தத்துக்காக யானைகளை வேட்டையாடியவர் கைது

கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் கடந்த 2011ம் ஆண்டு 3 ஆண் யானைகளும், சிறுமுகை வனப்பகுதியில் ஒரு யானையும் என மொத்தம் 4 யானைகள் மர்ம கும்பலால் வேட்டையாடப்பட்டு தந்தங்களை வெட்டி  கடத்தப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இதனைத்தொடர்ந்து சீகூர் வனப்பகுதியில் கடந்த 2015ம் ஆண்டு யானைகளை வேட்டையாட முயற்சி செய்த தேனியை சேர்ந்த சிங்கம்(45), குபேந்திரன்(42) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் கொடுத்த தகவலின் பேரில் கடந்த 2016ம்  ஆண்டு கல்லார் வனப்பகுதியில் யானைகள் புதைக்கப்பட்ட இடத்தை வனத்துறையினர் தோண்டி எலும்புக்கூடுகளை கைப்பற்றினர்.

மேலும் வாக்குமூலத்தில், இடுக்கியை சேர்ந்த பாபுஜோஸ்(40) என்பவர் தந்தத்திற்காக யானைகளை வேட்டையாட தூண்டியதாக தெரிவித்தனர். இந்நிலையில் மேட்டுப்பாளையம் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றில் ஆஜராக வந்த பாபுஜோசை  வனத்துறையினர் கைது செய்தனர். பின்னர் அவரை கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags : Elephant hunter ,Ivory ,elephant hunter arrest , Elephant hunter, arrested,ivory
× RELATED வீட்டில் யானைத் தந்தங்கள் பறிமுதல்:...