×

நவத்திருப்பதி கோயில்களில் சிறப்பு வழிபாடு

ஸ்ரீவைகுண்டம்: தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியை சுற்றி தாமிரபரணி நதிக்கரையோரத்தில், பெருமாளுக்குரிய நவத்திருப்பதி கோயில்கள் அமைந்துள்ளன. இங்கு புரட்டாசி முதல் சனிக்கிழமையான நேற்று ஸ்ரீவைகுண்டம்  கள்ளபிரான், நத்தம் விஜயாசனார், திருப்புளியங்குடி காசினிவேந்தன், பெருங்குளம் மாயகூத்தப்பெருமாள், தென்திருப்பேரை மகரநெடுங்குழைக்காதர், இரட்டை திருப்பதி தேவர்பிரான், அரவிந்தலோசனர், திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள்,  ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் பெருமாள் ஆகிய நவத்திருப்பதி கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன.


Tags : temples ,Navadhipathi , Navattiruppati Special ,Worship , Temples
× RELATED ஊத்துக்கோட்டை அருகே சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு