×

அண்ணா பல்கலைக்கழகத்தை உயர்புகழ் கல்வி நிறுவனமாக மாற்ற மத்திய அரசு நிதி வழங்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை: உயர்புகழ் நிறுவனங்களாக அறிவிக்கப்பட உள்ள 10 அரசு கல்வி நிறுவனங்களில் சென்னை ஐ.ஐ.டி உள்ளிட்ட 8 நிறுவனங்கள் மத்தியப் பல்கலைக்கழகங்கள் என்பதால் அவற்றுக்கான செலவை மத்திய அரசே ஏற்றுக்கொள்ளும். ஆனால்,அண்ணா  பல்கலைக்கழகத்திற்கு தேவைப்படும் 1750 கோடியை தமிழக அரசு வழங்குவதற்கான வாய்ப்புகளும் மிகவும் குறைவு. அதேநேரத்தில் 1750 கோடியை அடுத்த 5 ஆண்டுகளில் செலவிடுவதற்கான உத்தரவாதத்தை தமிழக அரசும், அண்ணா பல்கலைக்கழகமும் அளிக்காவிட்டால் இந்த தகுதி மராட்டியத்திலுள்ள சாவித்ரிபாய் புலே பல்கலைக்கழகம் அல்லது  அலிகார் இஸ்லாமியப் பல்கலைக்கழகத்திற்கு மாற்றி வழங்கப்படும் என்று தமிழக அரசுக்கு மத்திய அரசு நெருக்கடி கொடுத்து வருகிறது.

உயர்புகழ் கல்வி நிறுவனங்களுக்காக விண்ணப்பங்கள் பெறப்பட்ட போது, மாநில பல்கலைக்கழகங்களின் நிதி நிலை குறித்து அறிந்திருந்தும் அவை 2000 கோடி வரை செலவழிக்க வேண்டும் என்று மத்திய அரசு கூறுவது நியாயமற்றது.  சென்னை ஐ.ஐ.டி உள்ளிட்ட மீதமுள்ள 5 கல்வி நிறுவனங்களுக்கு மத்திய அரசே முழு நிதியையும் வழங்க உள்ளது. சென்னை அடையாறில் சாலையின் ஒருபுறத்தில் அமைந்துள்ள சென்னை ஐ.ஐ.டிக்கு முழு நிதியை வழங்கவுள்ள மத்திய அரசு, மறுபுறம் அமைந்துள்ள அண்ணா பல்கலைக்கழகத்திற்கு முழு நிதியை வழங்க மறுப்பது எந்த வகையில் நியாயம்.



Tags : government ,Anna University ,institution , Hierarchy ,Anna University,central government, educational institution:
× RELATED பதிவாளர் நியமனம் தொடர்பாக அண்ணா...