×

குவாங்ஸூ ஓபன் சோபியா சாம்பியன்

பெய்ஜிங்: குவாங்ஸூ ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில் அமெரிக்க வீராங்கனை சோபியா கெனின் சாம்பியன் பட்டம் வென்றார். இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவின் சமந்தா ஸ்டோசருடன் நேற்று மோதிய சோபியா 6-7 (4-7) என்ற கணக்கில் முதல் செட்டை இழந்து பின்தங்கினார். எனினும், அடுத்த 2 செட்களிலும் அதிரடியாக விளையாடி புள்ளிகளைக் குவித்த அவர் 6-4, 6-2 என கைப்பற்றி கோப்பையை முத்தமிட்டார். நடப்பு சீசனில் கெனின் வென்ற 3வது சாம்பியன் பட்டம் இது.


Tags : Guangzhou Open Sofia Champion , Guangzhou,Open Sofia, Champion
× RELATED ஹங்கேரியில் ரசிகர்களுடன் மீண்டும் கால்பந்து போட்டி.