×

எஸ்.ஐ.யிடம் இருந்து மனைவியை மீட்க கோரி ஆர்டிஓ ஆபீசில் தொழிலாளி போராட்டம்

கோவில்பட்டி: மனைவியை அழைத்துச் சென்ற சப் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்கவும், அவரிடம் இருந்து மனைவியை மீட்டு தரக்கோரியும் கோவில்பட்டி ஆர்டிஓ அலுவலகம் முன்பு கட்டிட தொழிலாளி திடீர் உண்ணாவிரதம் மேற்கொண்டார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள மும்மலைப்பட்டியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (47), கட்டிடத் தொழிலாளி. இவரது மனைவி ராமலட்சுமி (38). 3 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் நேற்று காலை பாலசுப்பிரமணியன் கோவில்பட்டி ஆர்டிஓ அலுவலகத்திற்கு வந்தார். பின்னர் அவர், திடீரென ஆர்டிஓ அலுவலகம் வாசல் முன்பு அமர்ந்து சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்து, திடீர்  உண்ணாவிரதத்தை தொடர்ந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது அவர் கூறுகையில், ‘‘ஒரு கொலை வழக்கு தொடர்பாக 78 நாட்கள் சிறையில் இருந்து தற்போது ஜாமீனில் வெளியில் வந்துள்ளேன். சிறையில் இருந்தபோது, என் மனைவி ராமலட்சுமியை எஸ்ஐ ஒருவர் அழைத்துச் சென்றதுடன்,  வீட்டில் வைத்திருந்த நகைகள், பணத்தையும் எடுத்துச் சென்றுவிட்டார். எனவே போலீஸ் அதிகாரியின் பிடியில் இருக்கும் எனது மனைவியையும், நகை, பணத்தையும் மீட்டுத் தர வேண்டும், போலீஸ் அதிகாரி மீது காவல்துறையினர் உரிய  நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.தகவலறிந்து கோவில்பட்டி கிழக்கு சப் இன்ஸ்பெக்டர் தர்மராஜ், அங்கு சென்று பாலசுப்பிரமணியனிடம்  பேச்சுவார்த்தை நடத்தினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Tags : office ,RTO ,RTI ,SI , Worker struggle in RTO office demanding rescue of wife from SI
× RELATED மேட்டூர் ஆர்டிஓ அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை திறப்பு