×

விஜய் போன்றோரின் பேச்சை கேட்டு மக்கள் முடிவு செய்ய வேண்டியதில்லை : அமைச்சர் கடம்பூர் ராஜூ

கோவில்பட்டி : விஜய் யாரை எங்கு வைக்க வேண்டுமோ அங்கு வைத்திருக்க வேண்டும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கருத்து தெரிவித்துள்ளார். மக்கள் யாரை எங்கு வைக்க வேண்டுமோ அங்கு சரியாகத்தான் வைத்துள்ளார்கள் என்றும் விஜய் போன்றோரின் பேச்சை கேட்டு மக்கள் முடிவு செய்ய வேண்டியதில்லை என்றும் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், நடிகர் விஜயின் படங்கள் வெளிவருவதற்கு அரசு உதவி செய்துள்ளது, அது அவருடைய மனசாட்சிக்கு தெரியும் என்றும் கூறினார். மேலும் அரசு அலட்சியத்தினால் கொலை எப்படி நடக்கும்? கமல் அரசியல்வாதிகளை குறை சொல்லவில்லை சட்டம், காவல்துறை, நீதிமன்றம் ஆகியவற்றை குறைசொல்கிறார் என்றும் கடம்பூர் ராஜு கண்டனம் தெரிவித்தார். தான் அரைவேக்காடு என்பதனை கமல்ஹாசனே ஒப்புக்கொண்டுள்ளார் என்றும் கடம்பூர் ராஜு குறிப்பிட்டது குறிப்பிடத்தக்கது.


Tags : Kadambur Raju Vijay ,Kadambur Raju , Kadambur Raju, Vijay, Kamal, Minister
× RELATED விஏஓ ஜாமீன் மனு தள்ளுபடி