×

பிரமோற்சவத்தை முன்னிட்டு ஆழ்வார் திருமஞ்சனம் திருப்பதி கோயிலில் 24ம் தேதி 6 மணி நேரம் தரிசனம் ரத்து

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 24ம் தேதி 6 மணி நேரம் தரிசனம் நிறுத்தப்படுகிறது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் தெலுங்கு வருடப்பிறப்பு (யுகாதி), ஆனிவார ஆஸ்தானம், வருடாந்திர  பிரமோற்சவம், வைகுண்ட ஏகாதசி ஆகிய உற்சவங்களுக்கு முன்னதாக வரும்  செவ்வாய்க் கிழமையில் கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் (தூய்மை பணி) நடைபெறுவது வழக்கம். அதன்படி, ஏழுமலையான் கோயிலில் வரும் 30ம் தேதி முதல் அக்டோபர் 8ம் தேதி வரை பிரமோற்சவம் நடைபெற உள்ளது. இதையொட்டி, தினமும் காலை 9 மணி முதல் 11 மணி வரையும், இரவு 8 மணி முதல் 10 மணி வரை மலையப்ப சுவாமியும், தாயாரும் நான்கு மாடவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளனர்.

இந்நிலையில். பிரமோற்சவத்தை முன்னிட்டு வரும் 24ம் தேதி கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற உள்ளது. இதையொட்டி, அன்று அதிகாலை சுப்ரபாத சேவை உள்ளிட்ட பூைஜகள் முடிந்ததும், பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிப்பது நிறுத்தப்படும். பின்னர், மூலவர் ஏழுமலையான் சிலை பட்டு துணியால் மூடப்பட்டு, காலை 6 மணிக்கு கோயில் சுத்தப்படுத்தும் பணிகள் தொடங்கும். தூய்மைப்பணி முடிந்ததும் சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்படும். பின்னர் மதியம் 12 மணிக்கு பிறகு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளனர்.



Tags : Darshan ,temple ,Alvar Thirumanganam Tirupathi ,Tirupati Temple ,Alvar Thirumanganam ,Pramosavam 24th , Alvar Thirumanganam ahead , Pramosavam 24th , Tirupati Temple
× RELATED திருப்பதியில் செப்டம்பர் மாத தரிசன டிக்கெட் முன்பதிவு முடிந்தது