×

தீபாவளி ஆர்டர் வராததால் முடங்கி கிடக்கும் கார்மென்ட்ஸ் நிறுவனங்கள் : நிரந்தரமாக மூடப்படும் அபாயம்

பள்ளிபாளையம்: பள்ளிபாளையத்தில் கார்மென்ட்ஸ் நிறுவனங்களுக்கு போதிய தீபாவளி ஆர்டர்கள் இல்லாததால், பெரும்பாலான தையல் மிஷின்கள் ஆட்களின்றி காலியாகவே இருக்கின்றன. பள்ளிப்பாளையத்தில் ஏறக்குறைய 150 ஆயத்த ஆடை தயாரிப்பு நிலையங்கள் உள்ளன. இங்கு 300 வகையான டிசைன்களில் சட்டைகள் தைத்து தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா மாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டு வந்தது. ஆனால் இவை கடந்த ஓராண்டாகவே ஆர்டர் இன்றி முடங்கி கிடக்கின்றன. டெய்லர்களுக்கு தட்டுப்பாடு இருந்த நிலை மாறி, இன்று பாதிக்கும் மேற்பட்ட மிஷின்கள் இயக்கப்படாமல் துருப்பிடித்து வருகின்றன. பள்ளிபாளையத்தில் 3 ஆயிரம் தையல் மிஷின்கள் இருப்பதாகவும், ஆர்டர் இல்லாததால் 500க்கும் மேற்பட்ட தையல் மிஷின்கள் இயக்கப்படாமல் அடுக்கி வைக்கப்பட்டுள்ளதாகவும் தொழிலாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.  இங்கு 180 ரூபாக்கு கூட சட்டை வாங்கலாம்.

இருப்பினும், தீபாவளி ஆர்டர்கள் வரவில்லை. ஏற்கனவே அனுப்பிய துணிகள் இன்னும் விற்பனையாகவில்லை. அதற்கான பணமும் கிடைக்கவில்லை. பெரிய விற்பனை நிலையங்களில் தேங்கியுள்ள துணிகளே விற்காத நிலையில், புதிய ஆர்டர்கள் கொடுப்பதும் குறைந்துள்ளதால் கார்மென்ட்ஸ் நிறுவனங்கள் திண்டாடுகின்றன. கடந்த 5 வருடங்களாகவே தீபாவளி விற்பனை குறைந்து வந்துள்ள போதிலும், இந்த ஆண்டு அதை விட பெரிய ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. வழக்கமாக பொங்கல் பண்டிகையை விட, தீபாவளி விற்பனை அதிகமாக இருக்கும். ஒரு தீபாவளி விற்பனையிலேயே ஆண்டு செலவினங்களை சமாளித்து விடலாம். ஆனால், தீபாவளி முடிந்த பிறகு பல நிறுவனங்கள் நிரந்தரமாக மூடப்படுமோ என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்த அளவுக்கு பொருளாதார பின்னடைவு ஏற்படுமென நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை என கார்மென்ட்ஸ் நிறுவனத்தினர் வேதனை தெரிவித்துள்ளனர்.

டிஜி லாக்கர் ஆவணங்கள் மத்திய அரசு திட்டவட்டம்

புதுடெல்லி: டிஜி லாக்கர், எம்-பரிவாகனில் சேமித்து வைக்கப்பட்டுள்ள டிரைவிங் வாகன பதிவு சான்று (ஆர்சி) ஆகியவற்றை ஒரிஜினல் ஆவணமாக ஏற்க வேண்டும் என மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது. போக்குவரத்து விதிகளின்படி, வாகனம் ஓட்டுவோர் ஒரிஜினல் டிரைவிங் லைசென்ஸ் வைத்திருக்க வேண்டும். இதுபோல் ஆர்சி புத்தகம், காப்பீடு ஆவணங்களையும் வைத்திருக்க வேண்டும். ஆனால், ஒரிஜினல் டிரைவிங் லைசென்ஸ் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என்பதால், அவை தொலைந்து விடுமோ என்ற அச்சத்தில் வாகன ஓட்டிகள் உள்ளனர். ஆனால், பெரும்பாலான மாநிலங்களில் டிஜிட்டல் வடிவ சான்றுகள் ஏற்கப்படுவதில்லை. இந்நிலையில், கடந்த 2018 நவம்பரில் வெளியிட்ட சுற்றறிக்கையை குறிப்பிட்டு, சாலை போக்குவரத்து அமைச்சகம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. டிஜி லாக்கர் அல்லது எம்-பரிவாகனில் ஆவணங்கள் பதிவு செய்யப்படாமல் இருந்தால், அவற்றை ஒரிஜினல் ஆவணமாக கருத வேண்டியதில்லை எனவும் கூறியுள்ளது.Tags : companies ,Carmen ,closure ,non-Diwali ,Garments companies , Garments companies, out of order , Diwali
× RELATED 6 மாதமாக ஜிஎஸ்டி தாக்கல் செய்யாத 5.43 லட்சம் நிறுவன பதிவு ரத்தாகிறது