×

இதுவரை இல்லாத வகையில் ஈரான் மத்திய வங்கி மீது அமெரிக்கா அதிரடி தடை

வாஷிங்டன்: இதுவரை எந்த நாட்டின் மீதும் விதிக்கப்படாத வகையில், ஈரான் நாட்டின் மத்திய வங்கி மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. தீவிரவாதிகளுக்கும், தீவிரவாத அமைப்புகளுக்கும் நிதியுதவி அளித்து வருவதாக ஈரான் மீது குற்றம்சாட்டிய அமெரிக்க அதிபர் டிரம்ப், அந்நாட்டுடன் அமெரிக்கா செய்திருந்த அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து விலகினார். இதைத் தொடர்ந்து, அந்நாட்டிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கும் உலக நாடுகளுக்கு தடை விதித்தார். இதனால், அமெரிக்கா - ஈரான் இடையிலான மோதல் நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. இந்நிலையில், அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடான சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையின் மீதும், எண்ணெய் வயல் மீதும் ஈரான் ஆதரவு பெற்ற ஹெய்தி தீவிரவாத அமைப்பு சில தினங்களுக்கு டிரோன் எனப்படும் ஆளில்லா விமானத் தாக்குதல் நடத்தியது. இதனால், இவற்றில் பெரும் ஏற்பட்டதால், சவுதி அரேபியாவின் எண்ணெய் உற்பத்தி பாதியாக குறைந்தது.

இதனால் ஆத்திமடைந்த அமெரிக்க அதிபர் டிரம்ப், இதற்கு பதிலடியாக ஈரான் மீது மிகப்பெரிய அளவில் பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என நேற்று முன்தினம் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, வாஷிங்டனில் நேற்று அவர் அளித்த பேட்டியில், ‘‘ஈரானின் மத்திய வங்கி (ரிசர்வ் வங்கி போன்றது) மீது பொருளாதார தடை விதிக்கப்படுகிறது. இதுவரை எந்த நாட்டின் மீதும் இதுபோன்ற மிகப்பெரிய தடையை அமெரிக்கா விதித்து கிடையாது,’’ என்றார். இந்த தடையின் மூலம் ஈரான் மத்திய வங்கியின் வெளிநாட்டு பணப் பரிமாற்றங்கள் முடக்கப்பட்டு, ஈரானுக்கு மிகப்பெரிய பெரியளவில் பொருளாதார இழப்பை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது.

Tags : US ,central bank ,Iranian , US ban , Iranian central bank
× RELATED அமெரிக்காவின் மேரிலேண்ட்...