×

கல்வி நிறுவனங்களில் நடக்கும் சாதி பாகுபாடு தற்கொலை மத்திய அரசுக்கு நோட்டீஸ்

புதுடெல்லி: ஐதராபாத்தில் உள்ள மத்திய பல்கலைக் கழகத்தில் சாதி அடிப்படையில் பாகுபாடு காட்டியதால் கடந்த 2016ம் ஆண்டு ஜனவரி 17ம் தேதி பிஎச்டி மாணவர் ரோகித் வெமுலா என்பவர் தற்கொலை செய்து கொண்டார். இதேபோல், தேசிய மருத்துவ கல்லூரியில், 3 மருத்துவர்கள் சாதி அடிப்படையில் கீழ்தரமாக நடத்தியதால் மனமுடைந்த பழங்குடியினத்தை சேர்ந்த தோபிவாலா என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.

இந்நிலையில், கல்வி நிறுவனங்களில் சாதி பாகுபாடு காரணமாக மாணவர்கள் தற்கொலை செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி, தற்கொலை செய்து கொண்ட 2 இந்த மாணவர்களின் பெற்றோர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். நீதிபதிகள் ஆர்வி ரமணா, அஜய் ரஸ்தோகி அமர்வில் இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அதை விசாரிக்க ஒப்புக்கொண்ட நீதிபதிகள், இது தொடர்பாக 4 வாரங்களில் பதில் அளிக்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்.


Tags : institutions ,government , Caste discrimination suicide ,notice to central government
× RELATED அதானி குழுமத்தில் முதலீடு செய்துள்ள FPI...