×

வடசென்னை பகுதியில் போக்குவரத்தை சீரமைக்க ஆலோசனை கூட்டம்

பெரம்பூர்: வடசென்னை பகுதியில் போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு தீர்வுகாணும் வகையில், வடக்கு போக்குவரத்து துணை ஆணையர் சியாமளா தேவி தலைமையில், ஆலோசனை கூட்டம், பாரிமுனை வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் நேற்று நடந்தது. இதில் பாரிமுனை, மண்ணடி, பிராட்வே, பூக்கடை, கொத்தவால்சாவடி வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை, திருவொற்றியூர், எண்ணூர், மணலி, மாதாவரம், செங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 200க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கலந்து கொண்டனர்.
 
கூட்டத்தில், கொத்தவால்சாவடி பகுதியில் கனரக வாகனங்களை குறிப்பிட்ட நேரத்தில் அனுமதிப்பது, செங்குன்றம் பகுதியில் அரிசி மண்டிக்கு வரும்  லாரிகளை உரிய முறையில் நிறுத்துவது, சேதமடைந்த சாலைகளை சீரமைப்பது, சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்களை முறைப்படுத்துவது, நெரிசல் பகுதிகளில் கண்காணிப்பு கேமரா அமைத்து கண்காணிப்பது உள்ளிட்ட ஆலோசனைகளை வியாபாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை ஒரு மாதத்தில் மேற்கொள்ளப்படும் என்று போக்குவரத்து ஆணையர் தெரிவித்தார். கூட்டத்தில், பூக்கடை போக்குவரத்து உதவி ஆணையர் ரவிச்சந்திரன், மாதவரம் போக்குவரத்து உதவி ஆணையர் பிரபாகர் மற்றும் வியாபாரிகள், போக்குவரத்து போலீசார் கலந்து கொண்டனர்.


Tags : Meeting ,region ,Northwestern , Advisory meeting , normalize traffic, north central region
× RELATED இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: மக்கள் பதற்றம்!